ஆட்டைய போடுறதுக்கு உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையாய்யா? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஆட்டைய போடுறதுக்கு உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையாய்யா?

பேடிஎம்
பேடிஎம்

paytm

ஒரு வருஷத்துல 774 கோடி ரூபாய் வருமானமா கிடைச்சு, அதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமா அதாவது, 1800 கோடி ரூபாய் செலவு ஆனதுன்னா, ஒரு கம்பெனி எவ்வளவு கஷ்டத்துல இருக்கும். இந்த மாதிரி நேரத்துல, எரிகிற  வீட்டுல பிடுங்குற வரை லாபம்னு கூட இருக்குற செவ்வாழைங்களே கைவரிசையா காட்டுனா அந்த கம்பெனியால‌ எப்புடி தாங்கிக்க முடியும்?

paytm

விஷயம் இதான். பத்து ரூவா மதிப்புள்ள பொருளை வாங்குனா, 10 ரூவாவையுமே கேஷ்பேக் ஆஃபர்ங்குற பேர்ல வாடிக்கையாளருக்கே திருப்பித் தருகிற "பரந்த" மனப்பான்மை கொண்ட பேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமான பேடிஎம் மால்லதான் இந்த கொடுமை நடந்திருக்கு. தோராயமாக 5 முதல் 10 கோடி ரூபாய் வரைக்கும் கேஷ்பேக் ஆஃபர்களில் தில்லுமுல்லு நடந்திருப்பதை அந்நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆடு களவு போனதை கண்டுபிடித்த நிறுவனம், களவாணி யாரென்றும் கண்டுபிடித்துள்ளது. அந்நிறுவனத்தில் பணியில் உள்ள ஜூனியர் லெவல் பணியாளர்கள், நிறுவனத்தின் விற்பனையாளர்கள் சிலருடன் கூட்டு சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

paytm mall

ஜூனியர் லெவல் பணியாளர்களை மேற்பார்வையிடும் சீனியர் லெவல் அதிகாரிகள், இந்த மோசடியைக் கண்டு ஜூனியர்களை கொலையாய் கொண்டிருப்பார்களே என நினைத்தால், அங்கேதான் ட்விஸ்ட். மோசடியில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என சீனியார்கள் எதார்த்தமாய் கேட்க, ஜூனியர்கள் பதார்த்தமாய் விட்டுகொடுத்துள்ளனர். நமக்குத் தேவையான பொருளையும் குடுத்து, கூடவே கேஷ்பேக்னு ஆஃபரும் குடுத்து, வேலை செய்றதுக்கு சம்பளமும் குடுக்குற இடத்துலயே ஆட்டைய போட உங்களுக்கெல்லாம் எப்புடியா மனசு வருது?

2018 TopTamilNews. All rights reserved.