ஊரடங்கில் முதியவர்களின் சிக்கல்களை இப்படியும் எதிர்கொள்ளலாம்!

 

ஊரடங்கில் முதியவர்களின் சிக்கல்களை இப்படியும் எதிர்கொள்ளலாம்!

கொரோனா மாபெரும் பேரிடரை இந்த உலகிற்கு அளித்துக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து மீள்வது பெரும் சுமையாக இருக்கிறது. கொரோனா பாதிப்புள்ள நாடுகள் ஊரடங்கை அறிவிக்கின்றன.

ஊரடங்கால்  அதிக சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் முதியவர்கள்தான். முதுமை நோய்க்கான சிகிச்சைக்கு செல்ல முடியாதது தொடங்கி வீட்டில் நடத்தப்படு விதம் வரை ஏராளமான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்.

ஊரடங்கில் முதியவர்களின் சிக்கல்களை இப்படியும் எதிர்கொள்ளலாம்!

பல முதியவர்களுக்கு தனிமையே பெரும் சிக்கலாக இருக்கிறது. தன்னோடு யாராவது பேசுவார்களா என்று எதிர்பார்த்து சோர்வடையும் முதியவர்கள் ஏராளம்.

இந்தக் கொரோனா காலத்தில் முதியவர்களை எப்படிக் கையாளலாம் என சேலம் பெரியார் பல்கலைக்கழக சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் பி. சேதுராஜகுமார் வழிகாட்டுகிறார்.

”முதியவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.அவர்களுக்கு உணர்வு ரீதியில் ஆதரவு அளித்து, தார்மிக ரீதியில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.  

ஊரடங்கில் முதியவர்களின் சிக்கல்களை இப்படியும் எதிர்கொள்ளலாம்!

இந்தியாவில், முதியவர்களுக்கு உடல் ரீதியிலான தொந்தரவுகள் மட்டுமின்றி, பொருளாதாரப் பிரச்சினைகளும் உள்ளன. குறிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்கள், மாற்றுத் திறனாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

மேலும், தனிமைப்படுத்தப்படுதல், தாழ்வு மனப்பான்மை, தலைமுறை இடைவெளி போன்ற சமூகக் காரணங்கள், மரியாதைக் குறைவு ஆகியவை மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் சாதாரண பிரச்சினைகளாக உள்ளன.

குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிப்பது, வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கும். சமையல், தோட்டம் பராமரித்தல் போன்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் நேரம் இனிமையாகக் கழியும்.

ஊரடங்கில் முதியவர்களின் சிக்கல்களை இப்படியும் எதிர்கொள்ளலாம்!

டிஜிட்டல் காலம் வந்துவிட்ட நிலையில், அருகில் இருப்பவர்கள் மற்றும் தொலைவில் இருக்கும் நேசத்துக்கு உரியவர்களுடன் விடியோ கால்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்ளலாம், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம். முடக்கநிலை அமல் காரணமாக நேரில் சந்திக்க முடியாத நிலையில், இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பரபரப்பான செய்திகள் மற்றும் வதந்திகளில் இருந்து மூத்த குடிமக்கள் விலகி இருக்க வேண்டும். அவை பதற்றத்தை அதிகரிக்கும். சரியான உணவு சாப்பிட வேண்டியதும் அவசியம். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கு நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும், அசைவ உணவுகளைக் குறைக்க வேண்டும்.

ஊரடங்கில் முதியவர்களின் சிக்கல்களை இப்படியும் எதிர்கொள்ளலாம்!

முதியவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் போல, முதியவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியது முக்கியம். முதியவர்களை உடல் ரீதியாகவோ வார்த்தைகளாலோ துன்புறுத்துவதை ஊக்குவிக்கக் கூடாது. துயரத்தில் இருக்கும் மூத்த குடிமக்கள் 1091 அல்லது 1291 என்ற ஹெல்ப்லைன் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.