ஒரே மெசெஜில் கொரோனா தடுப்பூசிக்கு முன்புதிவு… இனி எல்லாமே ஈஸி தான்!

 

ஒரே மெசெஜில் கொரோனா தடுப்பூசிக்கு முன்புதிவு… இனி எல்லாமே ஈஸி தான்!

கொரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகின் இயக்கத்தையே மாற்றியமைத்துள்ளது. எங்கு சென்றாலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது என கறாராக நடந்துகொண்டால்தான் கொரோனாவிலிருந்து நாம் தப்பிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதையெல்லாம் விட மிக முக்கியமானவை கொரோனா தடுப்பூசியும், அதை போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்தும் தடுப்பூசி சான்றிதழ். இரண்டுமே நடைமுறை வாழ்க்கையில் அத்தியாவசியமாகியுள்ளன.

ஒரே மெசெஜில் கொரோனா தடுப்பூசிக்கு முன்புதிவு… இனி எல்லாமே ஈஸி தான்!

ஆனால் இதை இரண்டையும் பெறுவது இன்றளவும் குதிரைக்கொம்பாக தான் இருக்கிறது. கோவின் இணையதளத்தில் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்வதும், தடுப்பூசி சான்றிதழைப் பெறுவதும் மிகவும் கடினமான நிகழ்வாகவே இருந்துவருகிறது. இப்பிரச்சினையைக் களையும் நோக்கில் புதிதாகப் பொறுப்பேற்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி சான்றிதழ் பெறும் நடைமுறையை சமீபத்தில் தொடங்கிவைத்தார். இதற்காக 90131-51515 என்ற வாட்ஸ்அப் எண் உருவாக்கப்பட்டது. அதில் covid certificate என டைப் செய்து அந்த நம்பருக்கு அனுப்பினால் ஓடிபி வரும். வேண்டும். ஓடிபி நம்பரை சமர்பித்தவுடன் நொடியில் சான்றிதழ் அனுப்பப்படுகிறது.

தற்போது ஸ்லாட் புக் செய்வதற்கும் இதே மாதிரியான நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சில நிமிடங்களில் வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசியை முன்பதிவு செய்துகொள்ளலாம். 90131 51515 என்ற எண்ணிற்கு ‘Book Slot’ என்ற மெசேஜ் அனுப்ப வேண்டும். பின்னர் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு OTP வரும். அதன் மூலம் உங்களுக்கான கொரோனா தடுப்பூசி முன் பதிவு செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதற்கான லிங்கையும் அவர் இணைத்துள்ளார்.