”வீடுகளில் இருந்தே புகார் அளிக்கலாம்” – நாமக்கல் காவல்துறை நடைமுறை!

”வீடுகளில் இருந்தே புகார் அளிக்கலாம்” – நாமக்கல் காவல்துறை நடைமுறை!

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து காவல் நிலையங்களிலும் புகார்களை, மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று விசாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

”வீடுகளில் இருந்தே புகார் அளிக்கலாம்” – நாமக்கல் காவல்துறை நடைமுறை!

தொற்று பரவுவதை தடுக்கவும், புகார் அளிக்க வருபவர்களின் நலன் கருதியும், பொதுமக்களின் புகார்களை நேரில் சென்று விசாரணை செய்ய வேண்டுமென நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவிட்டார்.

”வீடுகளில் இருந்தே புகார் அளிக்கலாம்” – நாமக்கல் காவல்துறை நடைமுறை!

இதையடுத்து அனைத்து காவல் நிலையங்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில் புகார் மனு அளிப்பவர்களின் வீடுகளுக்கே காவலர்கள் நேரடியாக சென்று விசாரணை நடத்தி புகார் பெற்று வருகின்றனர்.

”வீடுகளில் இருந்தே புகார் அளிக்கலாம்” – நாமக்கல் காவல்துறை நடைமுறை!

இதற்கான வாட்ஸ் அப் எண்களும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என புகார்களின் தன்மைக்கு ஏற்ப காவல்துறையினர் நேரடியாக சென்று விசாரணை நடத்துகின்றனர். இந்த நடைமுறைக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.