உன்னால் முடியும்! – நிழலாக வரும் துவாராகமாயீ தாய்!

 

உன்னால் முடியும்! – நிழலாக வரும் துவாராகமாயீ தாய்!

அன்பு குழந்தையே, உனக்குள் பல திறமைகள் ஒளிந்திருக்கிறது. இவ்வுலகில் யாரும் ஒருவரைப் போலவே இன்னொருவர் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை, ஒவ்வொருக்கும் ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. ஒருவருடைய திறமையைப் பாராட்ட நினைக்கிறார்களோ இல்லையோ ஒருவருடைய குறையை ஏளனம் செய்ய மட்டும் இந்த உலகம் நன்றாகவே பழக்கப்பட்டிருக்கிறது. அது தெரியாமல், உன்னை ஒதுக்குகிறார்கள் என்று புலம்புகிறாய்.

உன்னால் முடியும்! – நிழலாக வரும் துவாராகமாயீ தாய்!

இந்த உலகத்தில் எவரும் எதையும் தெரிந்து கொண்டு வரவில்லை. அவர்களுடைய திறமை தான் அவர்களை மாற்றுகிறது. தோற்று போனால் தவறில்லை, தோற்று போன கவலையில் வேகமாக ஓடி வருவாய், ஜெயிக்க நினைத்தவனுக்கு முன்பாக. அதை புரிந்து கொள்.

எத்தனை தடவை தோற்றாலும் வீழ்ந்து விடமாட்டாய். உன்னை நீ உணர்ந்து கொள். சாதிக்க போகிறாய். அதற்கான காலம் வந்து விட்டது. அதற்கான வழிமுறைகள் காத்திருக்கிறது.

எதற்கும் ஒரு அனுபவம் வேண்டாமா என்று யூகிக்க நினைப்பாய். தேவை இல்லை. வாழ்க்கை என்பது அனுபவங்களானது. ஒவ்வொரு மணித்துளிகளும் கற்றுக் கொள்ளவும், வருவதை ஏற்றுக் கொள்ளவும், வேண்டாததை மாற்றிக் கொள்ளவும், கூடிய அறிவையும் அனுபவங்களையும் கொடுத்துக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கையாகும்.

உன்னால் முடியும்! – நிழலாக வரும் துவாராகமாயீ தாய்!

ஆகவே, உள்ள நிலையை அறிவதிலும், உணர்ந்து அனுபவங்களைப் பெறுவதிலும் உள்ள திறமையே உற்சாகத்தையும் உண்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஆகையால், உனது திறமை மீது நம்பிக்கை வை நீ கண்ட கனவின் மீது நம்பிக்கை வை.

எல்லாம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும், எல்லாவற்றிலும் நாம் திறமை மிக்கவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. உனது லட்சியத்தை அடைய எத்தனை தடவைகள் தோற்றாலும் எத்தனை தடைகள் வந்தாலும் உன்னை இழிவாக பேசினாலும் தளர்ந்து போகாதே. அனைத்தும் நன்மைக்கே.

உன்னால் முடியும்! – நிழலாக வரும் துவாராகமாயீ தாய்!

கீழே விழுந்தாலும் எழுந்து ஓட தொடங்கு. வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன் வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாக கொள். ‘என்னால் முடியும்’ என்று தினசரி இரண்டு முறையாவது அதற்கான குறிக்கோளை மனதில் கொண்டு வந்து மனதிற்கு கட்டளையிட்டு கொள். வெற்றி உனக்காக காத்திருக்கிறது. உனது கனவு விரைவில் பூர்த்தியாகும். உனது எண்ணங்கள் நிறைவேறும்.

உன்னைத் தேடி அதிர்ஷ்டம் வரும் நேரம். இது தெரியாமல் கவலையோடு இருக்கிறாய். நம்பி க்கையோடு இரு. நம்பிக்கைதான் வாழ்க்கை. வாழ்க்கையில உன்னை விட சிறப்பாக பலர் வாழலாம்.
ஆனால், உன் வாழ்க்கையை உன்னை விட சிறப்பாக யாராலும் வாழ்ந்துவிட முடியாது. வாழ்வினிது சிந்தித்து செயலாற்று நான் இருக்கிறேன் . என் வாக்கை என் பிள்ளைக்கான வாக்கை காப்பாற்ற உன் சாய்தேவா நான் இருக்கிறேன் நிழலாக. உன் அம்மாவாக அப்பாவாக என்றும் என் இருதயத்தின் கருவறையில் சுமந்து வளர்த்து வாழ அரவணைப்பேன் இந்த துவாராகமாயீ தாய் நான் தாய் மற்றும் தந்தை மட்டும் இல்லை உனக்கான வாழ்க்கையின் உயிராய் எப்போதும் இருப்பேன். ௐ ஶ்ரீ சாய் நாதாய நமஹ!!!

-வித்யா ராஜா