“தடுப்பூசி போட்டு கொண்டாலும் மது குடிக்கலாம்” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

“தடுப்பூசி போட்டு கொண்டாலும் மது குடிக்கலாம்”  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தடுப்பூசி மையங்கள் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“தடுப்பூசி போட்டு கொண்டாலும் மது குடிக்கலாம்”  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , “தமிழகத்தில் தடுப்பூசி மையங்கள் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மது அருந்த கூடாது என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது. தேர்தல் பணியாளர்களையும், முன்கள பணியாளர்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்றார்.

“தடுப்பூசி போட்டு கொண்டாலும் மது குடிக்கலாம்”  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து பேசிய அவர், ” தமிழகத்தில் டெங்கு அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் டெங்கு பரவல் நடவடிக்கையாக உடனடியாக மேற்கொள்ள வேண்டும். டெங்கு கொசுக்கள் நன்னீரில் வளரும் . இதனால் வீடுகளை சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ” என்றார்.முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. 2வது டோஸ் போடும் வரையிலும் 28 நாட்களுக்கு மது அருந்த கூடாது என்று கூறியது கவனிக்கத்தக்கது.