சர்க்கரை ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்ற விண்ணப்பிக்கலாம்: முக்கிய அறிவிப்பு இதோ!

 

சர்க்கரை ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்ற விண்ணப்பிக்கலாம்: முக்கிய அறிவிப்பு இதோ!

தமிழகத்தில் மொத்தமாக 2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் இருக்கும் நிலையில், அவை 3 விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொருள் இல்லாத அட்டை, சர்க்கரை அட்டை, அரிசி அட்டை என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் அரிசி அட்டைகளையும், சர்க்கரை அட்டைகளையும் வைத்திருக்கிறார்கள். வெளியூரில் தங்கி வசிக்கும் பலரும் ரேஷன் பொருட்களை வாங்க விரும்பாத பலரும் பொருட்கள் இல்லாத கார்டுகளை வைத்திருக்கிறார்.

சர்க்கரை ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்ற விண்ணப்பிக்கலாம்: முக்கிய அறிவிப்பு இதோ!

இந்த நிலையில், சர்க்கரை அட்டைதாரர்கள் தங்களை அரிசிக்கு அட்டைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் படி, கடந்த ஆண்டு அரிசி அட்டைகளாக மாற்ற அரசு கால அவகாசம் அளித்தது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும், சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி குடும்ப அட்டைக்கு மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

இன்று முதல் 20ம் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்தில் குடும்ப அட்டைகளின் நகலை பதிவேற்றினால், தகுதி அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.