ஜி-மெயிலில் தகவல் அனுப்ப மட்டுமல்ல… வீடியோ கால் பேசவும் முடியும்! #EasySteps

ஜி-மெயிலில் தகவல் அனுப்ப மட்டுமல்ல… வீடியோ கால் பேசவும் முடியும்! #EasySteps

ஜி-மெயிலில் இணைந்திருப்போர் கோடிக்கணக்கில் இருப்பர். உலகின் அதிகமானவர்களின் விருப்பமானது ஜி-மெயில்.

இதன் மூலம் மெயில் வழியாகச் செய்திகள் அனுப்பி வந்தோம். அடுத்து டாக்குமெண்ட், கூகுள் ஷீட், சாட் என ஒவ்வொரு வசதியாக இது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், இதன் பயனாளர்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர்.

தற்போது ஜி-மெயில் மூலம் நீங்கள் வீடியோ கால் வழியாக உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் பேச முடியும்.

அதற்கு உங்களுக்கு மொபைல் எண் இணைக்கப்பட்ட ஜி-மெயில் கணக்கு இருக்க வேண்டும்.

ஜி-மெயிலில் தகவல் அனுப்ப மட்டுமல்ல… வீடியோ கால் பேசவும் முடியும்! #EasySteps

அடுத்து வழக்கம் போல ஐடி, பாஸ்வேர்டு கொடுத்து உங்கள் ஜி-மெயில் பக்கத்தைத் திறங்கள். அதன்  வலது மூலையில் meet ஆப்ஷனைக் கிளிக் செய்யவும். அதன்பிறகு, அது உங்கள் கேமரா, ஹெட்செட் ஆன் செய்ய பர்மிஷன் கேட்கும். அதற்கு நீங்கள் சம்மதம் கொடுத்துவிட்டால் உங்களுக்கான வீடியோ திரை ஓப்பனாகும்.

இதில் பல நன்பர்களோடு சேர்ந்து உரையாடலாம். அதற்கு அவர்களுக்கு எல்லாம் ஜிமெயில் அக்கவுண்ட் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

ஜி-மெயிலில் தகவல் அனுப்ப மட்டுமல்ல… வீடியோ கால் பேசவும் முடியும்! #EasySteps

நாம் ஏற்கெனவே சாட் செய்துகொண்டிருக்கும் நண்பர்களுக்கும் அதன் அருகிலேயே வீடியோ கேமரா படம் இருக்கும். அதை பிரஸ் செய்தால் வீடியோ காலாக மாறும். மொபைலில் இதற்கான ஆப் இருக்கிறது. அதனை டவுண்லோட் செய்துகொள்ளலாம்.

ஜூம் ஆப்பில் நம்பகத்தன்மை குறைவானது எனச் சொல்லப்படுகிறது. அதற்கு மாற்றாக இதனைக் கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.