லாக்டெளன் சண்டேவைக் கழிக்க இப்படியும் ப்ளான் பண்ணலாம்

 

லாக்டெளன் சண்டேவைக் கழிக்க இப்படியும் ப்ளான் பண்ணலாம்

’எப்பா.. ஞாயிற்றுக்கிழமை உன்னைய கடைசியா மார்ச்ல பார்த்தது…’

என்பது தொடங்கி ஞாயிற்றுக்கிழமையைக் கலாய்த்து சோஷியல் மீடியாவில் ஏராளமான மீம்ஸ் பார்க்க முடியும். அதில் தவறும் இல்லை. ஏனெனில், கிழமை தேதி எல்லாமே இந்த லாக்டெளனால் குழம்பிதான் போய்விட்டது.

ஆனாலும் சண்டே என்பது எப்போதும் ஸ்பெஷல்தான். வேலை பார்த்துகொண்டே இருப்போம். வேலை ரொம்ப டல்லா போகும். வேகமே இல்லாமல் செய்வோம். என்னவென்று யோசித்துப் பார்த்தால் அன்றைக்கு சண்டே வாக இருக்கும். அந்தளவுக்கு சண்டே ஹாலிடே மனநிலை நம் ரத்தத்தில் ஊறிவிட்டது என்றே சொல்லலாம்.

லாக்டெளன் சண்டேவைக் கழிக்க இப்படியும் ப்ளான் பண்ணலாம்

வழக்கமாக, சண்டே என்றால் வீட்டில் சமைக்காமல் வெளியே தியேட்டர், ஹோட்டல், பார்க், பீச் என ப்ளான் பண்ணுவீர்கள். ஆனால், இந்த லாக்டெளனில் அவற்றிற்கு வாய்ப்பே இல்லையே…

சரி, லாக்டெளன் சண்டே வை இப்படியும் செலவழிக்கலாம் என்று சில யோசனைகள் சொல்கிறேன். ஓகே என்றால் நடைமுறை படுத்துங்கள்.

பேமிலி சமையல்

எந்த சண்டே ஆனாலும் சூரியனுக்கு லேட்டாகத்தான் வெல்கம் சொல்வோம். அதுவே நாளையும் தொடரும். அதற்கு ஒரு பிரேக் விடலாம்.

எப்போதும் சமையல் பெண்களிடமே கொடுத்து விடுகிறார்கள் ஆண்கள். அதனால், லாக்டெளன் சண்டே என்பதை ஃபேமிலி சமையல் டே என்று மாற்றிக்கொள்ளுங்கள்.

லாக்டெளன் சண்டேவைக் கழிக்க இப்படியும் ப்ளான் பண்ணலாம்

காலையில் காபி போடுவதிலிருந்து இரவு தோசை ஊற்றுவது வரை என்ன சமைத்தாலும் அதில் வீட்டில் உள்ள அனைவரும் ஏதேனும் ஒரு பங்கு வகித்தாக வேண்டும்.

சட்னிக்கு தேங்காய் துருவிக் கொடுப்பதாக இருக்கலாம். காபிக்கு சக்கரை போடுவதாக இருக்கலாம். ஆனால், எல்லா உணவு வகைகளிலும் வீட்டில் உள்ள எல்லோரின் பங்கும் இருக்க வேண்டாம். பரிமாறுவதை எடுத்துக்கொள்கிறேன் என்று ஈஸியாக ப்ளான் போடாதீர்கள்.

ஃபேமிலி அண்ட் ஃப்ரெண்ட்ஸ்

பொதுவாக குடும்ப நண்பர்கள் எனச் சிலரைச் சொல்வோம். ஆனால், அவர்களை எல்லாம் ஒன்றாகப் பார்ப்பது நம் வீட்டில் ஏதேனும் கல்யாணம், குழந்தை பிறப்பு விழா போன்ற விழாக்களில்தான் முடியும். சிலரின் முகமே மறந்துபோயிருக்கும்.

லாக்டெளன் சண்டேவைக் கழிக்க இப்படியும் ப்ளான் பண்ணலாம்

அதனால், குடும்பத்தினருடன் உங்கள் நண்பர்களும் கலந்துரையாடும் ஆன்லைன் வீடியோ மீட்டிங் ஏற்பாடு செய்யலாம். ஜாலியாகப் பேசி மகிழ்வதை விட சண்டேவை எப்படிக் கொண்டாடுவது.

ரீஸ்டார்ட்

உங்களோ வீட்டில் உள்ளவர்களோ ஏதேனும் ஒன்றில் பயிற்சி எடுத்துப் பார்த்திருப்பார்கள். உதாரணமாக, ஓவியம் வரைவது, வயலின் இசைப்பது போன்றவை. ஆனால், வேலை பளுவால் அதை பாதியிலேயே விட்டிருப்போம்.

லாக்டெளன் சண்டேவைக் கழிக்க இப்படியும் ப்ளான் பண்ணலாம்

சண்டே காலையில் அப்படி விட்டுப்போன திறமைகளுக்கு ரீஸ்டார்ட் பண்ண வைப்பதைச் செய்யுங்கள். உங்கள் மனைவி / கணவனின் பயிற்சி எடுக்க மறந்துபோன திறமையை நினைவூட்டி அதைத் தொடர உதவுங்கள். ஒவ்வொரு ஞாயிறு என்று ப்ளான் பண்ணினாலும் அந்தப் பயிற்சியை லாக்டெளன் முடிந்தும் தொடர வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டுக்கூட அதில் தொடரக்கூட செய்யலாம்.

நோ டெக்னாலஜி டே

ஆம். தூங்கும் நேரம் தவிர ஏதேனும் ஒரு டெக்னாலஜியோடுதான் பொழுதைப் போக்குகிறோம். அதனால் இந்த சண்டே முடிந்தவரை டெக்னாலஜி பொருட்களைத் தவிர்க்க முயற்சி செய்யலாம். ஆபிஸ்லேருந்து டெக்ஸ்ட் பண்ணுவாங்க… அவசரம் அது இது என ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதை எப்படியோ சமாளித்து நோ டெக் டேவைக் கொண்டாடுங்கள்.

லாக்டெளன் சண்டேவைக் கழிக்க இப்படியும் ப்ளான் பண்ணலாம்

அப்போதுதான் ஒருநாள் என்பது எவ்வளவு நீளமானது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நாம் மறந்துபோன பல விஷயங்களைத் தேடிக்கண்டடைய முடியும்.