ஊரடங்கை மையமாக வைத்து குறும்படம் எடுத்த நடிகர் நாசர்!

 

ஊரடங்கை மையமாக வைத்து குறும்படம் எடுத்த நடிகர் நாசர்!

நடிகர் நாசர் கொரோனா பொதுமுடக்க காலத்தை மையமாக வைத்து யசோதா என்ற குறும் படத்தை தயாரித்து நடித்துள்ளார்

நாசர் மற்றும் ஸ்ரீப்ரியா இணைந்து வழங்கும் ‘யசோதா’ குறும்படம் கொரோனா பொதுமுடக்கத்தின் சிரமங்களை எடுத்துறைப்பதாக அமைந்திருக்கிறது. குறும்படம் என்ற கட்டுக்குள் அடங்கினாலும், நெஞ்சைத் தொடும் வகையில் அமைந்த நிறைவான படம் என்றுதான் இதைக் கூற வேண்டும்.

ஊரடங்கை மையமாக வைத்து குறும்படம் எடுத்த நடிகர் நாசர்!

சென்னையில் வசிக்கும் ஸ்ரீதர் கஸ்தூரி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த யசோதா குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னத்தாக தன்னுடைய மனைவியை வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் பொறுப்பில் விட்டுவிட்டு வெளியூரில் உள்ள தன்னுடைய வயதான தாயாரை பார்க்க செல்லுகிறார் ஸ்ரீதர். அவர் தாய்யை பார்க்க சென்றபின் ஊரடங்கு அமலாகிறது. இதனால் சென்னை திரும்ப முடியாமல் மாட்டிக் கொள்கிறார் ஸ்ரீதர். மேலும் வேலைக்கார பெண்மணியையோ, மனைவியையோ தொடர்பு கொள்ள முடியவில்லை. இதை எப்படி சமாளித்தார்? அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து யசோதா குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தில் நாசருடன் ஸ்ரீபிரியா, நித்யா, ஸ்ரீகாந்த், பானு பிரகாஷ், சோனியா போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.