விலை உயர்வு எதிரொலி.. உ.பி.யில் வெங்காயம், உருளை கிழங்கு வீடு வீடாக விற்பனை.. யோகி அரசு அதிரடி நடவடிக்கை

விலை உயர்வு எதிரொலி.. உ.பி.யில் வெங்காயம், உருளை கிழங்கு வீடு வீடாக விற்பனை.. யோகி அரசு அதிரடி நடவடிக்கை

விலை உயர்வை எதிரொலியாக உத்தர பிரதேசத்தில் வேனில் வீடு வீடாக சென்று வெங்காயம் மற்றும் உருளை கிழங்கை விற்பனை செய்யும் நடவடிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு எடுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் சமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உத்தர பிரதேசத்தில் வெங்காயத்தோடு, உருளை கிழங்கு விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த விலை உயர்வு ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

விலை உயர்வு எதிரொலி.. உ.பி.யில் வெங்காயம், உருளை கிழங்கு வீடு வீடாக விற்பனை.. யோகி அரசு அதிரடி நடவடிக்கை
வெங்காயம்

விலை உயர்வால் சமானிய மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மொபைல் வேன் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. வேன்களில் வெங்காயம் மற்றும் உருளைகிழங்கை குறைந்த விலைக்கு வீடு வீடாக சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக உத்தர பிரதேச மாநில் தொழில்துறை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.கே. கவுதம் கூறியதாவது:

விலை உயர்வு எதிரொலி.. உ.பி.யில் வெங்காயம், உருளை கிழங்கு வீடு வீடாக விற்பனை.. யோகி அரசு அதிரடி நடவடிக்கை
உருளை கிழங்கு

ராஜஸ்தானி வேன்களில் வெங்காயம் மற்றும் உருளைகிழங்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.55க்கும், ஒரு கிலோ உருளை கிழங்கு ரூ.36க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குளிர்பதன கிடங்குகளிலிருந்து அனைத்து உருளை கிழங்குகளும் வெளியே எடுக்கப்படுவதால் ஒரிரு நாட்களில் வெங்காயம் விலை வீழ்ச்சியடையும் என்று வர்த்தகர்கள் கணித்துள்ளனர். பஞ்சாபிலிருந்து உருளை கிழங்கு வர தொடங்கி விட்டது, கடந்த செப்டம்பர் முதல் பெங்களூருவிலிருந்து உத்தர பிரதேச மண்டிகளுக்கு உருளை வர தொடங்கி விட்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.