பேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும்.. பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.. விவசாயிகளிம் யோகி வேண்டுகோள்

பேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும்.. பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.. விவசாயிகளிம் யோகி வேண்டுகோள்

பேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்த விவசாயிகளிடம் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு தடையாக முட்டுக்கட்டைகளை நீக்கும் நோக்கில், மேற்கு உத்தர பிரதேச விவசாயிகளின் தலைவர்கள் குழுவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் அரை டஜன் காப் பஞ்சாயத்து தலைவர்கள் இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர்.

பேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும்.. பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.. விவசாயிகளிம் யோகி வேண்டுகோள்
பிரதமர் மோடி

இந்த சந்திப்பின்போது விவசாயிகள் குழு முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், கரும்பு நிலுவை தொகை, கிராமப்புறங்களில் மின்சார கட்டணம் உயர்வு குறித்து பிரச்சினைகளை தெரிவித்தனர். மேலும், தனியார் ஆழ்துளை கிணறுகளுக்கு மின் சப்ளை, கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்தத வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், அவர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.

பேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும்.. பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.. விவசாயிகளிம் யோகி வேண்டுகோள்
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

மேலும், புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் சொந்த நலனுக்கான குழுக்களால் பரப்பப்படும் வதந்திகளால் விவசாயிகள செயல்படக்கூடாது. மாறாக புதிய பேச்சுவார்த்தை நடத்த பிரதமரின் அழைப்பை ஏற்க வேண்டும். பேச்சுவார்த்தை உங்களின் குழப்பத்தை போக்கும். மத்திய அரசு நிச்சயம் உங்கள் பரிந்தரைகளை கேட்கும் என்று தெரிவித்தார்.