நீதிமன்றம் சொல்லிய போது கேட்காத யோகி ஆதித்யநாத்.. இப்போது தானாகவே ஊரடங்கை நீட்டிக்கும் உத்தர பிரதேச அரசு

நீதிமன்றம் சொல்லிய போது கேட்காத யோகி ஆதித்யநாத்.. இப்போது தானாகவே ஊரடங்கை நீட்டிக்கும் உத்தர பிரதேச அரசு

உத்தர பிரதேசத்தில் மே 4ம் தேதி (இன்று) காலை 7 மணி முதல் மே 6ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

முழு நாடும் கொரோனா வைரஸால் சிக்கி தவிக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடுமையான கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வார இறுதி லாக்டவுனை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலானஅரசு அமல்படுத்தியது.

நீதிமன்றம் சொல்லிய போது கேட்காத யோகி ஆதித்யநாத்.. இப்போது தானாகவே ஊரடங்கை நீட்டிக்கும் உத்தர பிரதேச அரசு
லாக்டவுன்

உத்தர பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி இரவு 8 மணி முதல் மே 4ம் தேதி (இன்று) காலை 7 மணி வரை (மொத்தம் 3 நாட்கள்) லாக்டவுன் அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்தது. ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும் நேற்று முன்தினம் புதிதாக 13,447 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மேலும் 288 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்த உத்தர பிரதேச அரசு அதிரடியாக ஊரடங்கை இன்று முதல் மேலும் 2 தினங்களுக்கு அதிகரித்துள்ளது.

நீதிமன்றம் சொல்லிய போது கேட்காத யோகி ஆதித்யநாத்.. இப்போது தானாகவே ஊரடங்கை நீட்டிக்கும் உத்தர பிரதேச அரசு
அலகாபாத் உயர் நீதிமன்றம்

மே 4ம் தேதி (இன்று) காலை 7 மணி முதல் மே 6ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்கும். அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் எஞ்சிய பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் மாநிலங்களில் 15 தினங்கள் லாக்டவுனை அமல்படுத்தும்படி அறிவுறுத்தியது. ஆனால் அப்போது அதற்கு யோகி அரசு மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.