யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை.. இது வெளிப்படையான போட்டி.. தாக்கரேவுக்கு குட்டு வைத்த யோகி ஆதித்யநாத்

 

யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை.. இது வெளிப்படையான போட்டி.. தாக்கரேவுக்கு குட்டு வைத்த யோகி ஆதித்யநாத்

யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை, இது வெளிப்படையான போட்டி என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோ மாநகராட்சி பத்திரங்கள் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட மற்றும் உத்தர பிரதேசத்தில் உருவாக உள்ள பிலிம் சிட்டி தொடர்பாக பாலிவுட் தயாரிப்பாளர்களை சந்திப்பதற்காக மும்பை சென்றார். யோகி ஆதித்யநாத் மும்பை வருவதற்கு முன்னதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, யாராவது முன்னேறினால் நாங்கள் பொறாமைப்படுவதில்லை. ஒருவர் போட்டியிட்டால் ஒருவரின் முன்னேற்றத்தில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நீங்கள் எதையும் வலுக்கட்டாயமாக எடுத்து செல்லப் போகிறீர்கள் என்றால், நான் நிச்சயமாக அதனை நடக்க விடமாட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.

யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை.. இது வெளிப்படையான போட்டி.. தாக்கரேவுக்கு குட்டு வைத்த யோகி ஆதித்யநாத்
முதல்வர் உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரேவின் மிரட்டலுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார். யோகி ஆதித்யநாத் மும்பையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை. இது ஒரு வெளிப்படையான போட்டி. சமூக பாதுகாப்பையும், வேலை செய்வதற்கு உகந்த சூழ்நிலையையும் வழங்கக்கூடிய எவருக்கும் வர்த்தகம் கிடைக்கும். பாலிவுட் மும்பையில் செயல்படும் ஆனால் புதிய பிலிம் சிட்டி உத்தர பிரதேசத்தில் உருவாக்கப்படும். நாங்கள் அனைத்து வசதிகளுடன் உலகம் தரம் வாய்ந்த சினிமா நகரத்தை கட்டுவோம்.

யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை.. இது வெளிப்படையான போட்டி.. தாக்கரேவுக்கு குட்டு வைத்த யோகி ஆதித்யநாத்
மும்பை பங்குச் சந்தையில் யோகி ஆதித்யநாத்

இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களுடன் பேசினேன். நாங்கள் எந்தவொரு மாநிலத்தின் முதலீட்டையும் திருடவில்லை. மாநில அரசின் ஸ்திரத்தன்மை உள்பட முதலீடுகளை உண்டாக்கும் பல காரணிகள் உள்ளன. உத்தர பிரதேச மக்கள் தொகை 24 கோடி. 1.25 லட்சம் வேலைகள் கொண்ட மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கிய மாநிலம். லக்னோ மாநகராட்சி பத்திரங்கள் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது எங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.