கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி… நேரில் பார்வையிட்ட ஆட்சியர்!

 

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி… நேரில் பார்வையிட்ட ஆட்சியர்!

கோவை

சர்வதேச யோகா தினத்தையொட்டி, கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட யோகா பயிற்சியை, ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டார்.

சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, கோவை கொடிசியா வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் கலந்துரையாடினார்.

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி… நேரில் பார்வையிட்ட ஆட்சியர்!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், ஊரடங்கு தளர்வு குறித்த தமிழக அரசின் அறிவிப்பில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் பிரிவில் கோவை மாவட்டம் உள்ளதாகவும், இதனால் ஒரு வார காலத்துக்கு புதிய தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும், கோவை மாவட்டத்தில் தற்போது உள்ளது போன்றே, மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளின்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கூறிய அவர், பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.