• November
    14
    Thursday

Main Area

Main



யோகா செய்பவர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயங்கள் *

யோகா
யோகா

இன்று எல்லோருமே அவசரகதியில் வாழ்ந்துக் கொண்டு வருகிறோம். நேரமில்லை என்ற நொண்டிச்சாக்கை நீங்கள் மூட்டை கட்டிவைத்துவிட்டு நமது உடலுக்காக தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்கவேண்டும். முதலில் சற்று தினசரி தடுமாற்றம் ஏற்படும். பிறகு போகப்போக அன்றாட வாழ்க்கையில் யோகா ஓர் அங்கமாக மாறிவிடும்.

yoga

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம். 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
யோக கலையைப் பயிற்சி செய்பவர்கள் வழிபடுவதற்கென்றே நம் தமிழகத்தில் பிரத்யேகமான சில ஆலயங்கள் இருக்கின்றன. கிரகங்களின் நிலையிலும், அறிவியியல் ரீதியிலும் இந்த ஆலயங்கள் யோகா பயிற்சி செய்பவர்களுக்கு மேலும் நல்ல பலன்களை அளிக்க வல்லவை. 

brama

ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் கோயில், திருப்பட்டூர்
உலகெங்கும் பரவலாகப் பின்பற்றப்படும் யோக கலையினை முறையாக வகுத்துக் யோக சூத்திரங்கள் தான் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இன்று வரையிலும் இவர் இயற்றிய ‘பதஞ்சலி யோக சூத்திரம்’ நூல் தான் யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்கி வருகிறது.  திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலுருக்கு அருகில் திருப்பட்டூர் எனும் இடத்தில் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் கோயில் எனும் பிரம்மா மற்றும் குருவிற்கான கோயில் உள்ளது அதன் அருகே பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதியும், புலிக்கால் முனிவரின் திருக்கோயிலும் அமைந்துள்ளது. அங்கு சென்று குரு, பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர் ஆகியவர்களை வணங்குவது யோகக்கலையைப் பயில்பவர்களுக்கும், பயிற்சி செய்பவர்களுக்கும் மேலும் சிறப்பை தரும்.

sidhhar

பதினெட்டு சித்தர்கள் ஆலயம், சென்னை
யோக கலையில், அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்களும் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர்கள். அவர்களின் ஜீவ சமாதிகளை வணங்குவது, வழிபடுவது யோகக் கலையைப் பயில விரும்புபவர்களுக்கும், யோக கலையில் ஆசிரியர்களாகத் திகழ நினைப்பவர்களுக்கும் நல்ல பலனைத் தரும். சென்னையில், தாம்பரம் கேம் ரோடு அருகே பதினெட்டு சித்தர்களுக்கான ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது ஆகியவை யோகக்கலை பயில விரும்பும் மற்றும் யோக கலை ஆசிரியர்களாக விளங்க சிறந்த வழிபாட்டு தலங்களாகும 

palani murugan temple

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி
சித்தர்களின் முதற்கடவுளாக விளங்குபவர் முருகன். செவ்வாய்க்கும் அதிபதி முருக கடவுள் தான். முருகனை பழனி மலைக்குச் சென்று தரிசிப்பது யோககலையில் சிறந்த நிலை அடைய உதவும். 

chidambaram

நடராஜ பெருமாள் ஆலயம், சிதம்பரம்
சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம், திருவாலங்காடு ஆகிய பஞ்ச சபைகளில் நடராஜ பெருமானை வணங்குவது, நடனம் யோககலை ஆகியவற்றில் உன்னத நிலை அடைய செய்யும். இருந்தாலும், இந்த பஞ்ச சபைகளில், சிதம்பரம் நடராஜபெருமானின் நடன நிலையைத் தான் யோகக்கலையின் உச்ச நிலை என்கிறார்கள். இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் யோக கலையில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.

2018 TopTamilNews. All rights reserved.