மருத்துவர்கள் அனைவரும் இந்த பூமியில் கடவுள் அனுப்பிய தூதர்கள்… பாபா ராம்தேவ் திடீர் மனமாற்றம்

 

மருத்துவர்கள் அனைவரும் இந்த பூமியில் கடவுள் அனுப்பிய தூதர்கள்… பாபா ராம்தேவ் திடீர் மனமாற்றம்

அலோபதி மருத்துவத்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில், திடீரென நல்ல மருத்துவர்கள் அனைவரும் இந்த பூமியில் கடவுள் அனுப்பிய தூதர்கள் என்று பாபா ராம்தேவ் பேசியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21ம் தேதி முதல் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவது குறித்த வரலாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். மேலும் மக்கள் யோகா மற்றும் ஆயுர்வேதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இது நோய்க்கு எதிராக ஒர பாதுகாப்பு கவசத்தை கொடுக்கும். மேலும் கோவிட் உயிரிழப்புகளை தடுக்கும். நானும் விரைவில் தடுப்பூசி போடுவேன்.

மருத்துவர்கள் அனைவரும் இந்த பூமியில் கடவுள் அனுப்பிய தூதர்கள்… பாபா ராம்தேவ் திடீர் மனமாற்றம்
பிரதமர் மோடி

நாம் எந்த அமைப்பினருடனும் பகையோடு இருக்க முடியாது. மேலும் நல்ல மருத்துவர்கள் அனைவரும் இந்த பூமியில் கடவுள் அனுப்பிய தூதர்கள். அவர்கள் கிரகத்துக்கு ஒரு பரிசு. ஆனால் ஒரு டாக்டர் ஏதேனும் தவறு செய்தால் அது அந்த நபரின் தவறு. பிரதான் மந்திரி ஜான் ஆஷாத் கடைகள் திறக்க வேண்டியிருந்தது. ஏனெனில் மருந்து மாபியாக்கள் ஆடம்பரமான கடைகளை திறந்து விட்டன. அங்கு அவர்கள் அடிப்படை மற்றம் அவசியமான மருந்துகளுக்கு பதிலாக அவசியமற்ற மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். எங்களது சண்டை நாட்டின் மருத்துவர்களிடம் இல்லை. எங்களை எதிர்க்கும் மருததுவர்கள், அதை ஒரு நிறுவனம் மூலம் செய்யவில்லை.

மருத்துவர்கள் அனைவரும் இந்த பூமியில் கடவுள் அனுப்பிய தூதர்கள்… பாபா ராம்தேவ் திடீர் மனமாற்றம்
ராம்தேவுக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு (கோப்புப்படம்)

மருந்துகளின் பெயரில் யாரும் துன்புறுத்தப்படக்கூடாது என்றும், தேவையற்ற மருந்துகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். அவசரகால பாதிப்புகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அலோபதி சிறந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உயிருக்கு ஆபத்தான பிற நோய்கள், குணப்படுத்த முடியாத கோளாறுகள் பண்டைய நடைமுறைகள் குணப்படுத்தலாம் என்று யோகா ஆயுர்வேதத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது வாதத்தின் விஷயமல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.