யானை மீது ஏறி யோகா; தவறி விழுந்த பாபா ராம்தேவ்! வைரலாகும் வீடியோ

 

யானை மீது ஏறி யோகா; தவறி விழுந்த பாபா ராம்தேவ்! வைரலாகும் வீடியோ

யானை மீது ஏறி யோகா செய்த சாமியார் பாபா ராம்தேவ் தவறி கீழே விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

பதஞ்சலி என்ற பெயரில் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருபவர் யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ். இவரது நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கியது.

https://twitter.com/niiravmodi/status/1315998427126226945

மதுராவில் உள்ள குரு ஷார்தானந்தா ஆசிரமத்தில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்த பாபா ராம்தேவ், தனது சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியான பிராணயாமம் செய்து காண்பித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த யானை நகர தொடங்கியது. இதனால் யானை மீது அமர்ந்திருந்த பாபா ராம்தேவ் கீழே தவறி விழுந்தார். ஆனால் கீழே விழுந்த உடன் ஒன்றுமே நடக்காதது போல் எழுந்து நின்ற பாபா, அசால்ட்டாக எதையும் காட்டிக்கொள்ளாமல் நடந்து சென்றார். ஆனால் அவருக்கு மேலிருந்து கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் அடிப்பட்டதாக கூறப்படுகிறது. பாபா ராம்தேவ் கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதற்கு முன் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த பாபா ராம்தேவ் நிலைத்தடுமாறி வீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது குறிப்பிடதக்கது.