நீண்ட காலம் பிரதமராக பணியாற்றவர்கள் பட்டியலில் 4 இடத்தை பிடித்தார் நரேந்திர மோடி.. முதல் இடத்தில் நேரு

நீண்ட காலம் பிரதமராக பணியாற்றவர்கள் பட்டியலில் 4 இடத்தை பிடித்தார் நரேந்திர மோடி.. முதல் இடத்தில் நேரு

நம் நாடு சுதந்திர அடைந்தது முதல் இதுவரை, ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை மொத்தம் 15 பிரதமர்களை கண்டுள்ளது. இவர்களில் ஒரு சிலரை நீண்ட நாட்கள் ஆட்சி செய்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவின் நீண்ட காலம் பணியாற்றி பிரதமர்கள் பட்டியல் நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பின்னுக்குள் தள்ளி பிரதமர் நரேந்திர மோடி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

நீண்ட காலம் பிரதமராக பணியாற்றவர்கள் பட்டியலில் 4 இடத்தை பிடித்தார் நரேந்திர மோடி.. முதல் இடத்தில் நேரு

நம் நாட்டில் ஒட்டு மொத்த அளவில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் நம் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருதான். அவர் மொத்தம் 16 ஆண்டுகள் மற்றும் 286 நாட்கள் பிரதமர் நாற்காலியில் இருந்துள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் நேருவின் மகள் இந்திரா காந்தி உள்ளார். நம் நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி மொத்தம் 11 ஆண்டுகள் மற்றும் 59 நாட்கள் நம் நாட்டை ஆட்சி செய்துள்ளார்.

நீண்ட காலம் பிரதமராக பணியாற்றவர்கள் பட்டியலில் 4 இடத்தை பிடித்தார் நரேந்திர மோடி.. முதல் இடத்தில் நேரு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த பட்டியலில் 3 வது இடத்தில் இருந்தார். அவர் மொத்தம் 10 ஆண்டுகள் மற்றும் 4 நாட்கள் பிரதமராக இருந்தார். இந்த பட்டியலில் நேற்று முன்தினம் வரை 4வது இடத்தில் இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பிரதமர் நரேந்திர மோடி பின்னுக்கு அந்த இடத்தை பிடித்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மொத்தம் 2,268 நாட்கள் நாட்டை வழிநடத்தியிருந்தார்.