Home உலகம் 10,758 பேர் நேற்று மட்டுமே மரணம்– உலகளவில் கொரோனா

10,758 பேர் நேற்று மட்டுமே மரணம்– உலகளவில் கொரோனா

நவம்பர் 20-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 72 லட்சத்து 36 ஆயிரத்து 335 பேர்.கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 97 லட்சத்து 22 ஆயிரத்து 802 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 65 ஆயிரத்து 634 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.  நேற்று  மட்டுமே  10,758 பேர் உலகளவில் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்.  

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,16,47,899 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 1,20,70,712 பேரும், இந்தியாவில் 90,04,365 பேரும், பிரேசில் நாட்டில்  59,83,089 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

 இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் அமெரிக்காவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

அமெரிக்காவில் 1.92,186 பேரும், பிரேசிலில் 35,686 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். இந்தியாவில் 46,182 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் இந்தியா, பிரேசில் நாடுகளை விடவும் அமெரிக்காவில் அதிகம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“பேனர், பதாகைகளை அகற்றுங்கள்” – சென்னை மாநகராட்சி உத்தரவு!

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல்...

மருமகனை கோவிலுக்குள் உயிருடன் எரித்துக்கொன்ற மாமனார் குடும்பம்

தெலுங்கானா மாநிலம் பால்வந்தபூர் மஞ்சுநாத் கோவிலுக்குள் இருந்து நேற்று முன் தினம் இரவு கரும்புகையும், மாமிசம் கருகும் வாடையும் வந்ததும் அப்பகுதியினர் அதிர்ச்சி்யில் குவிந்தனர். அங்கே...

கிருஷ்ணகிரி மருத்துவமனையில் பேரறிவாளன் : போலீஸ் பலத்த பாதுகாப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அழைத்து செல்லப்பட்டார். ராஜீவ் காந்தி...

“நிச்சயம் செய்துட்டு நிர்க்கதியாக்கிட்டு போயிட்டியே” கட்டிக்க மறுத்த பெண்ணை மிரட்டிய டாக்டர்.

ஒரு டாக்டரை நிச்சயம் செய்து விட்டு, திடீரென கட்டிக்க மறுத்த பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த டாக்டரை போலீஸ் தேடுகிறது .
Do NOT follow this link or you will be banned from the site!