பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

 

பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளாவின் 7 மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசராகோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு பச்சை வண்ண எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

“கண்ணூர் மற்றும் காசராகோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், லட்சத்தீவில் உள்ள அமினி, காவரதி, மினிகோய் மற்றும் அகதி தீவிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு கேரளா முழுவதும் இடியுடன் கூடிய மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஜூன் 20-ம்தேதி சனிக்கிழமையில் மஞ்சள் வண்ண எச்சரிக்கை வழங்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் அதிகாரிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசராகோடு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரள கடற்கரைகளில் காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கேரளாவின் பருவமழை பலத்த வெள்ளத்திற்கு வழிவகுத்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவலால் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது