‘சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்!

 

‘சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்!

அரசு இடத்தில் கட்டப்பட்டதால் ஈழத்தமிழர்களின் நினைவுத் தூண் அகற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழக துணை வேந்தர் சற்குணராஜா தெரிவித்திருக்கிறார்.

பிரபல செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ‘முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணை பல்கலைக்கழக நிர்வாகமும் அரசும் இணைந்து அகற்றியது. அரசு நிலத்தில் நினைவுத்தூண் கட்டியதை எப்படி அனுமதிக்க முடியும்?. அரசு இடத்தில் கட்டியதால் தான் அகற்றினோம். அதே இடத்தில் மீண்டும் தூண் அமைக்க அனுமதி வழங்கப்படாது. நினைவு தூண் அகற்றப்பட்ட விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டரீதியாகவும் சந்திக்க தயார்’ என்று தெரிவித்துள்ளார்.

‘சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்!

இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நினைவுத் தூண் கட்டப்பட்டது. சிங்கள அரசின் இனப்படுகொலைக்கான அடையாளமாக அந்த தூண் விளங்குவதால் அதனை இடிக்குமாறு ராஜபக்சே உத்தரவிட்டதாகவும் அதனை மூடி மறைப்பதற்காக இவ்வாறான திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுவதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

‘சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்திலும் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ், மு.க ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பலர் பதிவிட்டிருந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.