மகாராஷ்டிராவில் ஆட்சி நீடிக்க வேண்டுமானால் எங்க கட்சி தலைமை பற்றி வாயை திறக்காதீங்க.. காங்கிரஸ் வார்னிங்

 

மகாராஷ்டிராவில் ஆட்சி நீடிக்க வேண்டுமானால் எங்க கட்சி தலைமை பற்றி வாயை திறக்காதீங்க.. காங்கிரஸ் வார்னிங்

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி நிலையாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் எங்க கட்சி தலைமை குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்துங்க என்று கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை செய்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் நாட்டு மக்களால் ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய சீரான தன்மை இல்லை என்று தெரிவித்து இருந்தார். சரத் பவாரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக பொங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஆட்சி நீடிக்க வேண்டுமானால் எங்க கட்சி தலைமை பற்றி வாயை திறக்காதீங்க.. காங்கிரஸ் வார்னிங்
சரத் பவார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான யசோமதி தாக்கூர் இது தொடர்பாக டிவிட்டரில், எங்களது தலைமை மிகவும் வலுவானது மற்றும் நிலையானது. ஜனநாயக மதிப்புகளின் மீதான எங்களது வலுவான நம்பிக்கை விளைவுதான் மகா விகாஸ் அகாதி கூட்டணி உருவானது. மகாராஷ்டிராவில் நிலையான அரசாங்கத்தை நீங்கள் விரும்பினால் காங்கிரஸ் தலைமை குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்துங்கள் என்று மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள எனது சகாக்களிடம் மகாராஷ்டிரா காங்கிரஸின் செயல் தலைவராக கோரிக்கை விடுக்கிறேன்.

மகாராஷ்டிராவில் ஆட்சி நீடிக்க வேண்டுமானால் எங்க கட்சி தலைமை பற்றி வாயை திறக்காதீங்க.. காங்கிரஸ் வார்னிங்
ராகுல் காந்தி

எல்லோரும் கூட்டணியின் அடிப்படை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை கூல் பண்ண, ராகுல் காந்தி குறித்த சரத் பவாரின் கருத்து தந்தையின் ஆலோசனை போன்றது என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்தது. தேசியவாத காங்கிரசின் தலைமை செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறுகையில், செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சரத் பவார் என்ன சொல்லியிருந்தாலும் அது ஒரு மூத்த தலைவரின் தந்தையின் ஆலோசனையாக கருதப்பட வேண்டும். பராக் ஒபாமா தனது புத்கத்தில் ராகுல் காந்தி குறித்து கருத்து தெரிவித்ததை சரத் பவார் விமர்சித்தார். ஒபாமா மற்ற நாடுகளின் தலைவர்கள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என்று பவார் சாகேப் தெளிவாக கூறியிருந்தார் என்று தெரிவித்தார்.