ஒரே மாதத்தில் 60 ஆயிரம் பைக்குகளை விற்று தள்ளிய யமஹா…. உள்நாட்டில் விற்பனையில் முன்னேற்றம் கண்ட டாடா

ஒரே மாதத்தில் 60 ஆயிரம் பைக்குகளை விற்று தள்ளிய யமஹா…. உள்நாட்டில் விற்பனையில் முன்னேற்றம் கண்ட டாடா

கடந்த அக்டோபர் மாதத்தில் யமஹா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் விற்பனை சிறப்பாக இருந்தது.

இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை யமஹா பைக்களுக்கு ஒரு ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு. யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 60,176 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 31 சதவீதம் அதிகமாகும். 2019 அக்டோபர் மாதத்தில் 46,082 வாகனங்களை மட்டுமே யமஹா விற்பனை செய்து இருந்தது.

ஒரே மாதத்தில் 60 ஆயிரம் பைக்குகளை விற்று தள்ளிய யமஹா…. உள்நாட்டில் விற்பனையில் முன்னேற்றம் கண்ட டாடா
யமஹா மோட்டார் சைக்கிள்கள்

கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் தளர்த்தப்பட்டதால் கடந்த 4 மாதங்களாக விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவராத்திரியில் தொடங்கிய பண்டிகை காலத்தில் தேவை அதிகரிக்கும் என்றும், வரவிருக்கும் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் வரை தேவை நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரே மாதத்தில் 60 ஆயிரம் பைக்குகளை விற்று தள்ளிய யமஹா…. உள்நாட்டில் விற்பனையில் முன்னேற்றம் கண்ட டாடா
டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் உள்நாட்டில் 49,669 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும். 2019 அக்டோபர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் 39,512 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கு விலை 0.95 சதவீதம் அதிகரித்து ரூ.134.10ஆக உயர்ந்தது.