வங்கக்கடலில் உருவாகிறது ‘யாஸ்’ புயல் – வானிலை ஆய்வு மையம் தகவல்

 

வங்கக்கடலில் உருவாகிறது ‘யாஸ்’ புயல் – வானிலை ஆய்வு மையம் தகவல்

வடக்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24ஆம் தேதி புயலாக வலுப்பெற கூடுமென்றும் 26ஆம் தேதி மேற்கு வங்கம் – ஒடிசா இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

வங்கக்கடலில் உருவாகிறது ‘யாஸ்’ புயல் – வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த நான்கு நாட்களுக்கு 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி வரும் புயலுக்கு யாஸ் என பெயர் சூட்டப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பெயரை ஓமன் பரிந்துரைத்துள்ளது. இந்தப் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும் வாய்ப்பு குறைவு. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் வெப்பநிலையை அதிகரித்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகிறது ‘யாஸ்’ புயல் – வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தப் புயலின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்யும் என்றும் கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. முன்னதாக மத்திய வங்கக்கடலில் உருவான டவ்-தே புயல் குஜராத்தின் பல இடங்களை சூறையாடியது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.