ஹரிசான் எடிஷன் டிவிக்கள் அறிமுகம் சியோமி அதிரடி

 

ஹரிசான் எடிஷன் டிவிக்கள் அறிமுகம் சியோமி அதிரடி

சியோமி நிறுவனம் புதிய ஹரிசான் எடிஷன் டிவிக்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஹரிசான் எடிஷன் டிவிக்கள் அறிமுகம் சியோமி அதிரடி

32 இன்ச் மற்றும் 43 இன்ச் ஆகிய அளவுகளில் அறிமுகமாகி உள்ள இந்த புதிய டிவிக்கள், ஆண்டிராய்ட் 9 இயங்குதளத்தில் குவாட் கோர் பிராசசரில் இயங்குகிறது.

ஹரிசான் எடிஷன் டிவிக்கள் அறிமுகம் சியோமி அதிரடி

இதில் 32 இன்ச் டிவி எச்டி தரம் கொண்டதாகவும் 43 இன்ச் டிவி ஃபுல் எச்டி தரம் கொண்டதாகவும் இருக்கும் என்றும் மேலும் 3 எச்டிஎம்ஐ போர்ட், புளூடூத், வைபை உள்ளிட்ட வசதிகளுடன் 3.5 எம்எம் ஜாக் உடன் வெளிவந்துள்ளது.

இதில் 32 இன்ச் டிவி 13 ஆயிரத்து 499 என்ற விலைக்கு பிளிப்கார்ட் மற்றும் எம்ஐ ஸ்டோர்களில் வரும் 11ம் தேதி முதலும், 43 இன்ச் டிவி 22 ஆயிரத்து 999 என்ற விலைக்கு அமேசான் மற்றும் எம்ஐ ஸ்டோரில் வரும் 15ம் தேதி முதலும் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரிசான் எடிஷன் டிவிக்கள் அறிமுகம் சியோமி அதிரடி

இந்த புதிய வகை டிவிக்கள் பில்ட் இன் குரோம்கேஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் போன்ற வசதிகளுடன் வந்துள்ளது. மேலும் பேட்ச்வால் கன்டென்ட் பிளாட்பாரம் என்ற புதிய வசதியுடன் வருகிறது. இதில் யுனிவர்சல் செர்ச், கிட்ஸ் மோட், ஒன் கிளிக் பிளே என ஏகப்பட்ட கூடுதல் வசதிகளை பெறலாம் என தெரிகிறது.
-எஸ். முத்துக்குமார்