சியோமி எம்.ஐ செல்ஃபி ஸ்டிக் ட்ரைபாட் இந்தியாவில் அறிமுகம் – ப்ளூடூத் ரிமோட்டுடன் கிடைக்கிறது

 

சியோமி எம்.ஐ செல்ஃபி ஸ்டிக் ட்ரைபாட் இந்தியாவில் அறிமுகம் – ப்ளூடூத் ரிமோட்டுடன் கிடைக்கிறது

டெல்லி: ப்ளூடூத் ரிமோட்டுடன் கூடிய சியோமி எம்.ஐ செல்ஃபி ஸ்டிக் ட்ரைபாட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ப்ளூடூத் ரிமோட்டுடன் கூடிய சியோமி எம்.ஐ செல்ஃபி ஸ்டிக் ட்ரைபாட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை செல்ஃபி ஸ்டிக் ஆகவும் பயன்படுத்தலாம். ட்ரைபாட் ஆகவும் பயன்படுத்தலாம். இதில் பொத்தான்கள் மூலம் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவை தொடாமலே அதன் சில அம்சங்களை இயக்க முடியும். ப்ளூடூத் மூலம் இந்த சாதனம் வேலை செய்கிறது. அனைத்து விதமான அளவுகள் கொண்ட ஸ்மார்ட்போன்களையும் இதில் பொருத்த முடியும்.

இதனுடன் வழங்கப்படும் ப்ளூடூத் ரிமோட் மூலம் இந்த சாதனத்தை எளிதாக இயக்க முடிகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.1099 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு நிறத்தில் இந்த செல்ஃபி ஸ்டிக் ட்ரைபாட் உருவாக்கப்பட்டுள்ளது. அலுமினியம் அலாய் மூலம் இந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளதால் எடை மிகவும் குறைவாக காணப்படுகிறது. கைகளில் இருந்து வழுக்கி விடாத வகையில் கிரிப் வழங்கப்பட்டுள்ளது.