புதிய பிரிமீயம் ரக டிவி – 7ம் தேதி அறிமுகம் – சியோமி திட்டம் !

 

புதிய பிரிமீயம் ரக டிவி – 7ம் தேதி அறிமுகம் – சியோமி திட்டம் !

இந்திய செல்போன் சந்தையில் கலக்கி வரும் சியோமி நிறுவனம், வரும் 7ம் தேதி புதிய டிவி ரகத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்திய செல்போன் சந்தையை போலவே டிவி சந்தையிலும் வர்த்தகத்தின் அளவு கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனை பயன்படுத்தி கல்லா கட்ட பல நிறுவனங்கள் டிவிக்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பெரும் பிராண்டுகளான சோனி, சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்களை விட மிக குறைந்த விலைக்கு டிவிக்களை பல சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருவதால், ஆன்லைன் தளங்களில் டிவி வர்த்தகம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே செல்போன் சந்தையில் கொடிகட்டி பறக்கும் சியோமி, டிவி விற்பனையிலும் கலக்கி வருகிறது. இந்நிலையில், ஹரிசான் எடிஷன் என்ற பெயரில் புதிய டிவி ரகங்களை வரும் 7ம் தேதி அறிமுகப்படுத்த சியோமி திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத்தலைவர் மனோஜ் ஜெயின் டவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார்.

புதிய பிரிமீயம் ரக டிவி – 7ம் தேதி அறிமுகம் – சியோமி திட்டம் !

கியூஎல்இடி (அ) ஒஎல்இடி

இந்த புதிய டிவி சிறப்பம்சங்கள் குறித்து அதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவை பிரிமீயம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கியூஎல்இடி அல்லது ஒஎல்இடி டிவிக்களாக அறிமுகமாகும் என தெரிகிறது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர் வசதி உடன் வெளிவரும் இந்த ஆண்டிராய்ட் டிவியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை பயன்படுத்தலாம் என்றும் சியோமியின் சொந்த தயாரிப்பான பேட்ச்வால் யுஐ கொண்டதாக அவை இருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரிமீயம் ரக டிவி – 7ம் தேதி அறிமுகம் – சியோமி திட்டம் !


ஜன்னல் கண்ணாடி போன்ற ”டிரான்ஸ்பரண்ட் டிவி”’

இதனிடையே முதன்முறையாக டிரான்ஸ்பாரண்ட் வகை டிவிக்களை சியோமி நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. உயர்தர ஒஎல்இடி டிவி பேனல்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த டிவி, பயன்படுத்தாத சமயங்களில் ஜன்னல் கண்ணாடி போல மறுபக்கம் இருப்பதை பிரதிபலிக்க்க கூடியதாகவும், டிவியை பயன்படுத்தும் போது, அந்தரத்தில் காட்சிகள் தெரியும் வகையிலும் பார்வையாளர்களை பிரமிப்பூட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த டிவி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.-

-எஸ். முத்துக்குமார்