”19 நிமிடத்துல முழு சார்ஜ் – 80 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜர் – சியோமி திட்டம்”

 

”19 நிமிடத்துல முழு சார்ஜ் – 80 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜர் – சியோமி திட்டம்”

இனிமே சொடுக்கு போடுற நேரத்துல சார்ஜ் போட்டு, போன் கால் பேசிட முடியும்னு சொன்னா நம்புவீங்களா? நம்பித்தான் ஆகணும் !- வெறும் 19 நிமிடங்களில் 4000 எம்ஏஎச் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் 80 வாட்ஸ் சூப்பர் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜரை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

”19 நிமிடத்துல முழு சார்ஜ் – 80 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜர் – சியோமி திட்டம்”

முன்பொரு காலத்தில், சார்ஜ் குறைந்துவிட்டால், போனை சார்ஜில் போட்டுவிட்டு, சில மணிநேரம் அதையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலை தான் இருந்தது. ஒரு முக்கிய போன் அழைப்பு பாதியில் துண்டிக்கப்ட்டாலும் கூட, சார்ஜ் மீண்டும் ஏறி, அவர்களிடம் பேசுவதற்குள், வண்டியை எடுத்துக்கொண்டு நேரிலேயே சென்று பேசிவிடலாம். அந்தளவுக்கு சார்ஜிங் நிலை இருந்தது. பின்னர்10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜர்கள் அறிமுகமானது. ஒரு 4000 எம்ஏஎச் பேட்டரி சார்ஜ் ஆக 4 மணி நேரம் ஆகும் நிலையில் இந்த 10 வாட்ஸ் சார்ஜர், 30 நிமிடத்தை மிச்சப்டுத்தி தந்தது. இப்படியாக போய்க்கொண்டு இருந்த சார்ஜிங் தொழில்நுட்பத்தில் சியோமி, சீன நிறுவனங்கள் புரட்சியை ஏற்படுத்தி, அதிவேக சார்ஜர்களை அறிமுகப்படுத்த தொடங்கின.

”19 நிமிடத்துல முழு சார்ஜ் – 80 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜர் – சியோமி திட்டம்”

இதன் பிறகு, போனுடன் பாஸ்ட் சார்ஜர் கிடைக்கிறதா என்பது இப்போது மிக முக்கிய விஷயமாக பார்க்கும் நிலை வந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி அதிகபட்சமாக 65 வாட்ஸ் சார்ஜர் தான் சந்தையில் கிடைக்கிறது. இதில் 4000 எம்ஏஎச் பேட்டரியை 30 நிமிடத்தில் சார்ஜ் செய்ய முடியும். இந்நிலையில் இதெல்லாம் ஒன்னுமே இல்ல என சொல்லும் அளவுக்கு 19 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் ஏற்றும் அதிகவேக வயர்லெஸ் சார்ஜரை அறிமுகப்படுத்த சியோமி திட்டமிட்டுள்ளது.

சீனாவின் வெய்போ என்ற வலைதளத்தில் இது குறித்த தகவலை சியோமி வெளியிட்டுள்ளது. அதன் படி 80 வாட்ஸ் சார்ஜரை அறிமுகப்படுத்தி அதன் மூலம் சார்ஜிங் நேரத்தை பல மடங்கு குறைக்க திட்டமிட்டுள்ளதாம் சியோமி. அதாவது இந்த சார்ஜரை பயன்படுத்தி, வெறும் 8 நிமிடத்தில் 50 சதவீதமும், 19 நிமிடத்தில் 4000 எம்ஏஎச் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடவும் முடியுமாம். இதுல என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் இந்த சார்ஜர் வயர்லெஸ் சார்ஜர் ஆகும்.

அந்த நிறுவனம் கூறும் கணக்கின் படி பார்த்தால், ஒரே நிமிடம் சார்ஜ் போட்டால் கூட, 5 சதவீத பேட்டரி கிடைத்து அதை கொண்டு நாம் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. இந்த சார்ஜர் சந்தையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சூப்பர் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜர் எந்த போனுடன் வெளிவர உள்ளது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்