மடக்கும் டிஸ்ப்ளே போன் தயாரிப்பில் ஜியோமி!

 

மடக்கும் டிஸ்ப்ளே போன் தயாரிப்பில் ஜியோமி!

ஜியோமி நிறுவனம் அடுத்த ஆண்டில் மடக்கும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில், மூன்று மாடல்களில் இந்த போன்கள் அறிமுகம் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடக்கும் டிஸ்ப்ளே போன் தயாரிப்பில் ஜியோமி!

ஜியோமி நிறுவனம், டிஸ்ப்ளே பெரிதாக உள்ள போன்களை தயாரிக்கும் வகையில் மடக்கும் போன்களை கொண்டு வர உள்ளது. வெளிப்புறமாக மடிப்பது, உள்புறமாக மடிப்பது மற்றும் மடக்கும் வடிவில் இந்த போன்கள் இருக்கும் என தெரிகிறது. வரும் ஆண்டுகளில் டிஸ்ப்ளே பெரிதாக உள்ள போன்களுக்கான சந்தை அதிகரிக்கும் என்பதால், ஜியோமி இந்த முயற்சியில் இறங்க உள்ளது. சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே பெரிய டிஸ்ப்ளே கொண்ட போன்களை சந்தைப்படுத்தி வருகின்றன. இந்த வரிசையில் ஜியோமி இணையும் முயற்சியாக இதுபார்க்கப்படுகிறது.

மடக்கும் டிஸ்ப்ளே போன் தயாரிப்பில் ஜியோமி!

சாம்சங் நிறுவனம் ஏற்கெனவே சுருளும் வகையிலான ஓஎல்இடி பேனல்கள் மூலம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் முயற்சியில் உள்ளது. எல்.ஜி நிறுவனமும் அந்த வரிசையில் உள்ளது. இந்த நிறுவனங்களின் மடக்கும் போன்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அநேகமான கிளாம்ஷெல் (clamshell) அடிப்படையில் மடக்கும் போன்களாக இருக்கும் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் தனது மடக்கும் வடிவிலான ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z, 3 மாடலை அடுத்த ஆண்டு வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.