ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஜியோமி.. முதலிடத்தை விட்டுக்கொடுக்காத சாம்சங்

ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஜியோமி.. முதலிடத்தை விட்டுக்கொடுக்காத சாம்சங்

சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ஜியோமி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம் சாம்சங் நிறுவனம் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.

உலகளாவிய தொழில்நுட்ப சந்தை ஆய்வு நிறுவனமான கனலிஸ் சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, கடந்த ஜூன் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் தென்கொரிய நிறுவனமான சாம்சங் 19 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஜியோமி.. முதலிடத்தை விட்டுக்கொடுக்காத சாம்சங்
சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

இரண்டாவது இடத்தை சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி பிடித்துள்ளது. கடந்த காலாண்டில் உலமெங்கும் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் 17 சதவீதம் ஜியோமி நிறுவனத்துடையது. கடந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை ஜியோமி பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஜியோமி.. முதலிடத்தை விட்டுக்கொடுக்காத சாம்சங்
ஆப்பிள் போன்கள்

ஜியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த ஜூன் காலாண்டில் 83 சதவீதம் அதிகரித்துள்ளது. சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் விலையோடு ஒப்பிடும்போது, ஜியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பனை முறையே 40 சதவீதம் மற்றும் 75 சதவீதம் குறைவாகும். பிரபல ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் 14 சதவீத சந்தை பங்களிப்புடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.