மீண்டும் வூகானை ஆக்கிரமிக்கும் கொரோனா… கட்டுப்படுத்த அதிரடி முடிவெடுத்த சீனா!

 

மீண்டும் வூகானை ஆக்கிரமிக்கும் கொரோனா… கட்டுப்படுத்த அதிரடி முடிவெடுத்த சீனா!

அனைவருக்கும் கொரோனா என்று சொன்னாலே சீனாவின் வூகான் மாகாணம் தான் நினைவுக்கு வரும். இன்று ஒட்டுமொத்த உலகத்தை குறிப்பாக இந்தியாவை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது கொரோனா எனும் பெருந்தொற்று. கொரோனா வைரஸின் பிறப்பிடம் என வூகான் மாகாணம் அறியப்படுகிறது. உலகத்துக்கே பரப்பிவிட்ட வூகான் கடந்த மாதம் வரை அமைதிப் பூங்காவாக இருந்தது. ஆனால் இப்போது இல்லை.

மீண்டும் வூகானை ஆக்கிரமிக்கும் கொரோனா… கட்டுப்படுத்த அதிரடி முடிவெடுத்த சீனா!

இந்தியாவில் உருமாற்றமடைந்து இந்தியாவை உலுக்கிய டெல்டா கொரோனா தான் என்று சொல்லப்படுகிறது. டெல்டா கொரோனா இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்குப் பரவி அந்நாடுகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. அதற்கு சீனாவும் விதிவிலக்கில்லாமல் போய்விட்டது. டெல்டா கொரோனா சாதாரண கொரோனாவை விட 50% வேகமாகப் பரவக் கூடியது. அதேபோல நுரையீரல் செல்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. 2019ஆம் ஆண்டு இருந்த மோசமான நிலைக்கு சீனா சென்றுகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் வூகானை ஆக்கிரமிக்கும் கொரோனா… கட்டுப்படுத்த அதிரடி முடிவெடுத்த சீனா!

இதனால் வூகான், ஜியாங்சூ, செச்சுவான், லியானிங், ஹூனான், ஹூபெய் உள்ளிட்ட 13 மாகாணங்களில் திடீரென்று கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. விமானப் போக்குவரத்து உட்பட அனைத்துப் போக்குவரத்துக்கும் தடை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடு என கிட்டத்தட்ட முழு ஊரடங்கு போல் உச்சக்கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல வூகானில் உள்ள 1.1 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளைச் செய்ய சீன அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி பரவலைக் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.