எழுத்தாளர்… ஊர்ச்சுற்றி… மொழிபெயர்பாளர் கி.அ.சச்சிதானந்தம் மரணம்

 

எழுத்தாளர்… ஊர்ச்சுற்றி… மொழிபெயர்பாளர் கி.அ.சச்சிதானந்தம் மரணம்

தமிழில் தனித்துவமான ஒரு படைப்பாளியாக விளங்கியவர் கி.அ.சச்சிதானந்தம். தன்னை எப்போதும் முன்னிருத்திக் கொள்ளாது நல்ல படைப்புகளையும் படைப்பாளிகளையும் கொண்டாடியவர்.

சென்னையில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்பவர்களுக்கு கி.அ.சச்சினாந்தத்தை நன்கு தெரியும். பல எழுத்தாளுமைகளுடன் பழகிய அற்புதமான தருணங்களை அதே ஈர்ப்போடு பகிர்ந்துகொள்வார். எப்போதுமே உரையாடலுக்கு தயாராக இருக்கும் மனநிலை வாய்த்தவர்.

எழுத்தாளர்… ஊர்ச்சுற்றி… மொழிபெயர்பாளர் கி.அ.சச்சிதானந்தம் மரணம்

செங்கல்பட்டில் பிறந்தவர். ஏழ்மையான குடும்பப் பின்னணி என்றாலும் படிக்க வைத்தார்கள். பச்சையப்பன் கல்லூரியில் படித்தார். ரவிந்திரநாத் தாகூர் எழுத்துகள் மீது ஆர்வம் கொண்டு படித்தவர். அஞ்சல் துறையில் வேலை பார்த்தவர். ’எழுத்து’ செல்லப்பா தொடங்கி இன்றைக்கு எழுதி வரும் இளம் எழுத்தாளர்கள் வரை நல்ல நட்பில் இருந்தவர்.

’உயர் இயக்கம்’, ;அம்மாவின் அத்தை’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்பு நூல்கள் இவர் எழுதி வெளிவந்தவை. தாகூரின் நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

எழுத்தாளர்… ஊர்ச்சுற்றி… மொழிபெயர்பாளர் கி.அ.சச்சிதானந்தம் மரணம்

எழுத்தாளர் மெளனியை இவர் நேர்காணல் செய்தது இன்று வரை பேசப்பட்டு வருகிறது. பலரையும் தேடிச் சென்று பார்க்கவும், நல்ல அனுபவத்திற்காக ஊர்ச்சுற்றவும் விருப்பம் கொண்டவர்.

இன்னும் நிறைய சிறப்புகளை கி.அ.சச்சிதானந்தம் பற்றிச் சொல்லலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் இன்று காலையில் மரணம் அடைந்தார்.

அவரின் முக்கியப் படைப்புகளைப் பற்றி பல எழுத்தாளர்கள் சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.