உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 5 ஆம் நாள் முடிவில் இந்தியா 64/2

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 5 ஆம் நாள் முடிவில் இந்தியா 64/2

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 49 ரன்களும் , கேப்டன் கோலி 44 ரன்களும் எடுத்தனர்.நியூசிலாந்து அணியின் தரப்பில் அற்புதமாக பந்துவீசிய ஜெமிஸன் சீசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 5 ஆம் நாள் முடிவில் இந்தியா 64/2

இதன் பிறகு தனது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டிய முடிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்றும் தொடர் மழை பெய்ததால் 4ம் நாள் ஆட்டமும் முழுவதுமாக கைவிடப்பட்டது. இன்றைய ஆட்டம் மழையினால் 01.30 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி உணவு இடைவேளைக்குள் மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தது. நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணியின் கடைநிலை வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை மிகவும் சோதனைக்குள்ளாக்கினர். கடைசி 4 விக்கெட்டுக்கு 87 ரன்கள் குவித்தனர். சவுதி 30 ரன்களும்,ஜெமிஸன் 21 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்.99.2 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்களை எடுத்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி , இந்திய அணியை விட 32 ரன்கள் கூடுதலாக எடுத்து முன்னிலை பெற்றது.

இதன் பிறகு தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

சுப்மன் கில் 8 ரன்களிலும் ரோகித் சர்மா 30 ரன்களிலும் சவுத்தியிடம் அவுட் ஆகினர். புஜாராவும், அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் கவனமாக விளையாடினர். ஐந்தாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.