WTC Final- இன்றைய போட்டி ரத்து!

 

WTC Final- இன்றைய போட்டி ரத்து!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் இன்று நடைபெறவிருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது.

Image

இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் இன்றைய ஆட்டத்தில் மோதவிருந்தது. இந்த சூழலில் இன்று காலையில் இருந்து சவுத்தாம்ப்டன் நகரில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆட்டத்தில் முதல் பகுதி (உணவு இடைவெளி வரை) போட்டி ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்நிலையில் மழை விட்டு விட்டு பெய்து வருவதாலும் மைதானம் ஈரப்பதமாக உள்ளதாலும் இன்றைய ஆட்டம் டாஸ் போடப்படாமலே முடிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே இந்திய நேரப்படி 07.30 மணிக்கு நடுவர்கள் வந்து மைதானத்தை ஆய்வு செய்யும் போது மழை இல்லாமலும் மைதானத்தில் ஈரப்பதம் இல்லாமலும், மைதானம் விளையாடும் அளவுக்கு தயாராக இருந்தால் ஆட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு மழை தொடர்ந்து பெய்துவருவதால் இன்றைய போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறுதிப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ரத்து செய்யப்பட்ட இந்த போட்டிகள் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை கூறுவதால் இறுதிப் போட்டி நடைபெறும் என கேள்வி எழுந்துள்ளது.