விமானியின் அதீத நம்பிக்கையே கோழிக்கோடு விபத்துக்கு காரணம்! – கருப்பு பெட்டி ஆய்வு தகவல்

விமானியின் அதீத நம்பிக்கையே கோழிக்கோடு விபத்துக்கு காரணம்! – கருப்பு பெட்டி ஆய்வு தகவல்

விமானியின் அதீத நம்பிக்கை, எடுத்த தவறான முடிவுகளே கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் என்று கருப்புப் பெட்டியில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

விமானியின் அதீத நம்பிக்கையே கோழிக்கோடு விபத்துக்கு காரணம்! – கருப்பு பெட்டி ஆய்வு தகவல்
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிரங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 140க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர்.
விமான விபத்தைத் தடுக்க முயன்று, ஏராளமான உயிர்களைக் காப்பாற்றிய விமானி என்று தொடக்கத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது. விமானம் வெடிப்பதைத் தவிர்க்க முன் கூட்டியே இன்ஜினை ஆஃப் செய்து பயணிகளைக் காப்பாற்றினார், முழுக்க முழுக்க ஓடுபாதையில் ஏற்பட்ட தவறுதான் விபத்துக்கு காரணம் என்று எல்லாம் செய்தி வெளியானது.

விமானியின் அதீத நம்பிக்கையே கோழிக்கோடு விபத்துக்கு காரணம்! – கருப்பு பெட்டி ஆய்வு தகவல்
தற்போது கருப்புப் பெட்டியை ஆய்வு செய்த அதிகாரிகள், அதன் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். இதன் அடிப்படையில் கரிப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானியின் அதீத நம்பிக்கையே கோழிக்கோடு விபத்துக்கு காரணம்! – கருப்பு பெட்டி ஆய்வு தகவல்
கோழிக்கோடு விமான நிலையத்தில் ஓடுதளம் எண் 28ல்தான் விமானங்கள் தரையிறங்கும். ஆனால் மழை காரணமாக ஓடுதளம் 28ல் தரையிறங்கும் முயற்சி வெற்றிபெறாது என்று கருதி மீண்டும் விமானத்தை டேக்ஆஃப் செய்துள்ளார் விமானி. பிறகு அவராக சுய முடிவெடுத்து விமான நிலையத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஓடுதளம் 10ல் தரையிறங்கியுள்ளார்.

விமானியின் அதீத நம்பிக்கையே கோழிக்கோடு விபத்துக்கு காரணம்! – கருப்பு பெட்டி ஆய்வு தகவல்
போயிங் 747 ரக விமானங்கள் 15 நாட்டிக்கல் மைல் காற்றை எதிர்கொள்ளும் திறன் கொண்டது என்பதால் விமானி 10ம் எண் ஓடுதளத்தில் தரையிறங்கும் முடிவை சுயமாக எடுத்துள்ளார். ஆனால், விமானி எதிர்பார்த்தபடி விமானத்தின் வேகம் குறையவில்லை. விமானத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விபத்தை தவிர்க்க மீண்டும் டேக் ஆஃப் செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அதுவும் வெற்றி பெறவில்லை. விமானம் கீழே விழுந்து இரண்டு துண்டாக உடைந்துள்ளது.
விமானம் வெடிக்காமல் இருக்க முன்கூட்டியே இன்ஜினை விமானி ஆஃப் செய்தார் என்று செய்தி வெளியானது. உண்மையில் 35 அடி பள்ளத்தில் விமானம் விழுந்து இரண்டாக உடையும் வரை இன்ஜின் இயங்கிக் கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.