Home தமிழகம் எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!

எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!

எழுத்தாளர் கி.ரா. உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். கி.ரா. உடலுக்கு சொந்த ஊரான தூத்துக்குடி கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவலில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் பிற்பகல் 1 மணிக்கு புதுச்சேரியிலிருந்து சொந்த ஊருக்கு கி.ரா.வின் உடல் எடுத்து செல்லப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசின் முழு அரசு மரியாதையுடன் கி.ரா. உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!
எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதுபெரும் தமிழ் எழுத்தாளர், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், பெரியவர் திரு. கி.ராஜநாராயணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.தமிழின் தனித்துவமான கதை சொல்லியாக, அழியாத படைப்புகளை தந்தவராக, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்த கி.ரா அவர்களின் மறைவு தமிழுக்கு பேரிழப்பாகும். அன்னாரது மறைவால் வாடும் உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் எம்.பி. திருமாவளவன், “நூறாண்டுகள் வாழ்ந்து நிறைவான பெருவாழ்வு கண்ட கரிசல்இலக்கியச்செம்மல்கி்ரா அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம். மக்கள்மொழியில் இலக்கியம் படைத்து இலக்கிய மொழியின் மரபை உடைத்து கரிசல் மண்ணுக்குப் பெருமைசேர்த்த கனித்தமிழின் #காலக்கொடை! வாழ்க அவர் புகழ். வெல்ககரிசல்தமிழ்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்...

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...
- Advertisment -
TopTamilNews