ஒரே நாளில் 2 மல்யுத்த வீரர்கள் அரையிறுதிக்குள்… இந்தியாவின் பதக்க வேட்டை தொடருமா?

 

ஒரே நாளில் 2 மல்யுத்த வீரர்கள் அரையிறுதிக்குள்… இந்தியாவின் பதக்க வேட்டை தொடருமா?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்கள் மட்டுமே பெற்றுள்ளது. முதல் நாளில் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி வென்று அசத்தினார். அன்றிலிருந்து கடந்த 10 நாட்கள் வரை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு எந்தப் பதக்கமும் கிடைக்கவில்லை. இச்சூழலில் அரையிறுதியில் வெற்றிவாய்ப்பை இழந்தாலும் அதிரடியாக விளையாடி இந்தியாவிற்காக மற்றொரு பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார் வெண்கல மங்கை பி.வி.சிந்து.

ஒரே நாளில் 2 மல்யுத்த வீரர்கள் அரையிறுதிக்குள்… இந்தியாவின் பதக்க வேட்டை தொடருமா?
தீபக் புனியா (இடது), ரவி தஹியா (வலது)

இதுதவிர இந்திய ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஆடவிருக்கிறது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இதில் வெற்றிபெற்றால் வெள்ளிப் பதக்கம் உறுதியாகிவிடும். இச்சூழலில் மேலும் இரு வீரர்கள் அரையிறுதிக்குள் நுழைந்திருப்பது இந்தியாவுக்கு மேலும் சில பதங்கங்களை அள்ளித்தருவார்கள் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. மல்யுத்த போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 2 மல்யுத்த வீரர்கள் அரையிறுதிக்குள்… இந்தியாவின் பதக்க வேட்டை தொடருமா?

இதில் 57 கிலோ எடைப்பிரிவில் ரவிக்குமார் தஹியா தன்னை எதிர்த்து மோதிய பல்கேரிய வீரர் ஜார்ஜி வாலண்டினோவ் வாங்கேலோவை துவம்சம் செய்தார். ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய ரவிக்குமார் 14-4 என்ற புள்ளிக் கணக்கில் ஜார்ஜியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். அதேபோல 86 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரரான தீபக் புனியா சீன வீரர் ஜுஷென் லின்னை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் தனது திறமையால் சீன வீரரை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்று ஒரே நாளில் இரு வீரர்கள் அரையிறுதிக்குள் சென்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.