திக்… திக்… இறுதிச்சுற்றுக்குள் இந்திய மல்யுத்த வீரர்… வென்றால் தங்கம்; தோற்றால் வெள்ளி!

 

திக்… திக்… இறுதிச்சுற்றுக்குள் இந்திய மல்யுத்த வீரர்… வென்றால் தங்கம்; தோற்றால் வெள்ளி!

இன்றைய நாள் நிச்சயம் இந்தியாவிற்கு கொண்டாட்ட நாள் தான். அடுத்தடுத்து இன்பச் செய்திகளாக டோக்கியோவிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆம் காலையில்தான் குத்துச்சண்டை வீராங்கனை 69 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்தார். அவர் அரையிறுதியில் தோல்வியைத் தழுவினாலும், அரையிறுதி வரை சென்றதால் அவருக்கு வெண்கலப் பதக்கம் நிச்சயம். அதேபோல ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சிலையே இலக்கு தூரத்தைத் தாண்டி எறிந்து நேரடியாக பைனலுக்கு தகுதிபெற்றார்.

திக்… திக்… இறுதிச்சுற்றுக்குள் இந்திய மல்யுத்த வீரர்… வென்றால் தங்கம்; தோற்றால் வெள்ளி!

அதேபோல 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா காலிறுதியில் சீன வீரர் ஜுஷென் லின்னை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் தனது திறமையால் சீன வீரரை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். 57 கிலோ எடைப்பிரிவுக்கான மற்றொரு மல்யுத்த காலிறுதி போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா பல்கேரிய வீரர் ஜார்ஜி வாலண்டினோவ் வாங்கேலோவை துவம்சம் செய்தார். ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய ரவிக்குமார் 14-4 என்ற புள்ளிக் கணக்கில் ஜார்ஜியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Ravi Dahiya to fight for gold at Poland Open after 3 consecutive wins -  Sportstar

தற்போது அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளார். இறுதிப் போட்டியில் மோதும் வீரரை வெற்றிகண்டால் ரவிக்குமார் தஹியாவுக்கு தங்கப் பதக்கம் நிச்சயம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளிப் பதக்கம் கிடைக்கும். ஆகவே தங்கம் லட்சியம்; வெள்ளி நிச்சயம் என்ற புத்துணர்வோடு எந்தவித தயக்கம் இல்லாமலும் ஆடினால் லட்சியம் நிறைவேறும். ஆண்கள் தரப்பில் இதுவரை ஒரு பதக்கங்கள் கூட வரவில்லையே என்ற ஏக்கத்தை ரவிக்குமார் போக்கியுள்ளார்.