ரஜியின் புதிய ரோல்… குஷ்பு கருத்து

 

ரஜியின் புதிய ரோல்… குஷ்பு கருத்து

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக இன்று அறிவித்ததும், டுவிட்டர் டிரெண்ட்டிங்கில் ரஜினிதான் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறார். ரஜினி ரசிகர்களை தங்களது வாழ்த்துக்களை சொல்லி இணையங்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

திரையுலக பிரபலங்களும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜியின் புதிய ரோல்… குஷ்பு கருத்து

’’மிக்க நன்றி தலைவா. இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், ‘’இந்த தருணத்திற்காக காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேற நான் ராகவேந்திரா சாமியிடம் பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், கடுமையான இந்த கொரோனா நெருக்கடியிலும் நீங்கள் மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்திருக்கிறீர்கள். உங்களின் கனவு நிச்சயமாக நிறைவேறும் என்று வாழ்த்தியுள்ளார்.

ரஜியின் புதிய ரோல்… குஷ்பு கருத்து

’’நல்ல முடிவை எடுத்திருக்கிறீர்கள். புதிய ரோல் எடுத்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எப்போதும் போலவே இந்த ரோலிலும் உங்கள் திறைமையை காட்டுவார்கள். வாழ்த்துக்கள்’’ என்று நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

’’இனி தான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்’’என்று கூறியிருக்கிறார் இசையமப்பாளர் அனிருத்.

’’Wow……. Thalaivaaaaa வா தலைவா’’என்று சொல்லியிருக்கிறார் ரஜினியின் திவீர ரசிகரும், இயக்குருமான கார்த்திக் சுப்புராஜ்.