வாவ்…. அற்புதமான இரண்டு கேட்ச்கள்! – மும்பையின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்

வாவ்…. அற்புதமான இரண்டு கேட்ச்கள்! – மும்பையின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு மோதிய மும்பை இண்டியன்ஸ் தனது அசத்தலான இன்னொரு வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் மும்பை பாயிண்ட் டேபிளில் முதலிடத்திற்கு முந்திச் சென்றுள்ளது.

டாஸ் வின் பண்ணிய கேப்டன்கள் பெரும்பாலும் சேஸிங் என்பதையே முடிவெக்கும் இந்த சீசனில் நேற்று டாஸ் வின் பண்ணிய ரோஹித் ஷர்மா, முதலில் பேட்டிங் என முடிவெடுத்தார்.

வாவ்…. அற்புதமான இரண்டு கேட்ச்கள்! – மும்பையின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்

டி காக் – ரோஹித் ஜோடி ஓப்பனிங் இறங்கியது. இருவரும் அடித்து ஆடினர். இந்த ஜோடி நிலைத்து ஆடியதில்லை என்ற விமர்சனத்தைத் தகர்ப்பார்கள் என்று நினைத்த வேளையில், 23 ரன்கள் எடுத்த நிலையில் கார்டிக் தியாகி வீசிய பந்தை பட்லரிடம் கேட்ச் கொத்து அவுட்டானர் டி காக்.

ரோஹித்தோடு சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் ராஜஸ்தான் பவுலர்களை பந்தாடியது. அணியின் ஸ்கோர் 88, ரோஹித் ஸ்கோர் 35 இருக்கையில் கோபால் வீசிய பந்தைத் தூக்கி அடித்தபோது அது ராகுல் திவட்டியாவிடம் கேட்சாக மாறியது.

வாவ்…. அற்புதமான இரண்டு கேட்ச்கள்! – மும்பையின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்

அடுத்து வந்த இஷான் கிஸன் வந்த முதல் பந்திலே கோபால் பந்துவீச்சில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

க்ருணால் பாண்டியா 12 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஹிர்திக் பாண்டியா வந்தார். ஆனால், மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சதுபோல சூர்யகுமார் நிலைத்து ஆடி, பந்துகளை பவுண்ட்ரிகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.

வாவ்…. அற்புதமான இரண்டு கேட்ச்கள்! – மும்பையின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்

47 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்ட்ரிகளுமாக 79 ரன்களை விளாசியிருந்தார். ஹிர்திக் 30 ரன்களைச் சேர்க்க அணியின் ஸ்கோர் 193 ஆக உயர்ந்தது. முதல் போட்டியில் மட்டுமே மும்பை 162 ரன்கள் எடுத்தது. அடுத்த நான்கு போட்டிகளிலும் 190 க்கும் அதிகமாகவே எடுத்தது.

வாவ்…. அற்புதமான இரண்டு கேட்ச்கள்! – மும்பையின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்

194 எனும் பெரிய இலக்கை நோக்கிச் செல்ல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓப்பனிங் வீரர்களாக ஜெயிஸ்வால் – பட்லர் இறங்கினர். ஜெயிஸ்வால் சரியாக ஆடவில்லை என்று இரு போட்டிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். ஆனால், நேற்று அவர் இறங்கியது ஆச்சர்யம்தான். அவர் இரண்டே பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட்டானார். அவரின் விக்கெட்டை போல்ட் கைப்பற்றினார். அடுத்து இறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் புயல் பந்துவீச்சில் அவுட்டானார்.

வாவ்…. அற்புதமான இரண்டு கேட்ச்கள்! – மும்பையின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்

மிகுந்த எதிர்ப்பார்ப்போடு சஞ்சு சாம்சனை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், போல்ட் பந்துவீச்சில் ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானர். சாம்சன் ஓரிரு ஓவர்கள் நிதானித்து ஆடத் தொடங்கியிருக்கலாம். அவர் கடந்த இரண்டு ஆட்டங்களாக அவசரப்பட்டு தவறான ஷாட்கள ஆடி அவுட்டாகி வருகிறார். நேற்றும் அதுவே தொடர்ந்தது.

3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 12 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை நோக்கிச் சென்றது ராஜஸ்தான் அணி.

வாவ்…. அற்புதமான இரண்டு கேட்ச்கள்! – மும்பையின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்

இன்னொரு பக்கம் பட்லர் சிக்ஸர்களை விளாசிக்கொண்டிருந்தார். அவர் கடைசி வரை நின்றால் ராஜஸ்தான் அணி வெற்றி பெறக்கூடும் என்ற நிலையில், 13.3 வது ஓவரில் பேட்டின்சன் வீசிய பந்தை எல்லைக்கோட்டைத் தாண்டிச் செல்ல தூக்கி அடித்தார் பட்லர். ஆனால், அங்கே ஃபீல்டிங்கில் இருந்த பொலார்டு எகிறி அந்தப் பந்தைத் தடுத்தார்; தட்டி விட்டார்; கேட்ச் பிடித்தார். ஆம்… அந்த ஓரிடு நொடிகள் மேஜிக் போலத்தான் இருந்தது. அந்தக் கேட்ச்தான் மும்பையின் வெற்றியை உறுதி செய்தது. பட்லர் 44 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்ட்ரிகளோடு 70 ரன்கள் எடுத்திருந்தார்.

வாவ்…. அற்புதமான இரண்டு கேட்ச்கள்! – மும்பையின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்

லோம்ரோர் இறங்கியதும் ராஜஸ்தான் ரசிகர்களுக்கு மீண்டும் நம்பிக்கை வந்தது. அவரும் ஒரு பவுண்ட்ரி வீசினார். 8-வது ஓவரில் பேட்டின்சன் வீசிய பந்தை தூக்கி அடித்தார் லோம்ரோர். ஆனால், அதை காற்றில் பறந்து பிடித்தார் அனுகுல் ராய். மிக மிக கஷ்டமான கேட்ச் அது, ஓரிரு நொடிகள் பறந்துதான் அந்த கேட்சைப் பிடித்தார் அனுகுல். அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் அபாயகரமான வீரரான லோம்ரோரை திருப்பி அனுப்பிய அனுகுல், சூர்யகுமாருக்குப் பதிலாக ஃபீல்டிங் செய்ய வந்தவர்.

வாவ்…. அற்புதமான இரண்டு கேட்ச்கள்! – மும்பையின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்

டாம் கர்ரன் 15, ராகுல் திவட்டியா 5, ஆர்ச்சர் 24, கோபால் 1, ராஜ்புத் 2, கார்டிக் தியாகி 0 என அனைத்து விக்கெட்டுகளையும் 18.1 ஓவரில் பறிகொடுத்து 136 ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால், 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றியைச் சூடிக்கொண்டது.

மும்பை பவுலிங்கில் 4 ஓவர் வீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார் பும்ரா. போல்ட் மற்றும் பேட்டின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் ராகுல் சாஹர் மற்றும் பொலார்டு ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வாவ்…. அற்புதமான இரண்டு கேட்ச்கள்! – மும்பையின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்

பேட்டிங், பீல்டிங், பவுலிங் என மூன்றிலுமே முழு திறனை மும்பை அணி வெளிப்படுத்தியது. ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப் எல்லாம் சேர்ந்து மும்பையை வெற்றிகரமாகச் செல்ல உதவி வருகிறது. இந்த சீக்ரெட் ப்ளான் தொய்வில்லாமல் நீடித்தால் இந்த சீசன் கோப்பையையும் மும்பைத் தட்டிச் செல்லக்கூடும்.