“அப்படி சொல்ல நான் என்ன முட்டாளா?” – அந்தர் பல்டி அடித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

“அப்படி சொல்ல நான் என்ன முட்டாளா?” – அந்தர் பல்டி அடித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் அரசின் புள்ளிவிவரப்படி நாட்டில் தினமும் குறைந்தது 11 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் 22,000க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. அதேபோல உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின பேத அறிக்கை படி, பாலின பேதத்தில் உலகின் மிக மோசமான நான்கு நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசு மீது கடும் விமர்சனம் எழுந்தது.

“அப்படி சொல்ல நான் என்ன முட்டாளா?” – அந்தர் பல்டி அடித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இதையொட்டி பாகிஸ்தான் பிரதமர் சில வாரங்களுக்கு தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த இம்ரான் கான், பெண்கள் அணியும் ஆடை தான் பெரும்பாலான பாலியல் குற்றங்களுக்கு காரணம் என்பது போல் கருத்து தெரிவித்தார். அவர்களின் ஆடைக் குறைப்பால் ஆண்கள் தூண்டப்பட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபவதாகவும் அவர் கூறியிருந்தார்.

“அப்படி சொல்ல நான் என்ன முட்டாளா?” – அந்தர் பல்டி அடித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

அவரின் இந்தக் கருத்து பலத்த விமர்சனங்களை எழுப்பியது. ஆணாதிக்கம் நிறைந்த தீவிர வலதுசாரி போல இம்ரான் கான் பேசிருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இச்சூழலில் அமெரிக்க ஊடகத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவரின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது அவர், “நான் யாருக்கு பேட்டி கொடுக்கிறேன். பேட்டியில் என்ன பேசுகிறேன் என்பதை தெரிந்துதான் செய்வேன். நான் ஒருபோதும் பாலியல் வன்முறைக்கு பெண்கள்தான் காரணம் என்ற முட்டாள்தனமான காரணத்தை சொல்லியிருக்கவே வாய்ப்பில்லை.

“அப்படி சொல்ல நான் என்ன முட்டாளா?” – அந்தர் பல்டி அடித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

நான் கூறிய கருத்துகளை திரித்து கூறிவிட்டனர். பாகிஸ்தானில் கொஞ்சம் நாட்களாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை வலியுறுத்தியே அப்பேட்டியில் நான் பேசியிருந்தேன். பாலியல் வன்புணர்வு செய்யும் நபர் தான் அந்தக் குற்றத்துக்கு முழு பொறுப்பு. பாலியல் வன்முறையில் பெண்கள் அணிந்திருக்கும் ஆடை அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஒரு பெண் எந்த மாதிரியான உடை அணிந்திருந்தாலும் சரி அவருக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு ஒருபோதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பொறுப்பில்லை” என்றார்.