ஹேண்ட் சானிடைசரை காரில் வைத்திருந்தால் தீப்பிடிக்குமா? – உண்மை என்ன?

 

ஹேண்ட் சானிடைசரை காரில் வைத்திருந்தால் தீப்பிடிக்குமா? – உண்மை என்ன?

உட்புறத்தில் சூடான சூழலை கொண்ட பூட்டிய காருக்குள் ஹேண்ட் சானிடைசர் பாட்டிலை வைத்திருந்தால் அவை தானாக எரியுமா?

அதிக வெப்பநிலை காரணமாக ஹேண்ட் சானிடைசர் பாட்டில் வெடித்ததாக, ஒரு கார் கதவின் உள் பேனல் எரிந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது. ஆகவே சானிடைசரை தங்கள் கார்களில் விட்டுச் செல்வது பற்றி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்த பதிவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், சானிடைசர்களில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அவை தன்னிச்சையாக எரிவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் உள்ளூர் தீயணைப்புத் துறை இதே எச்சரிக்கைகளை அதே புகைப்படத்துடன் பகிர்ந்ததால் இந்த விஷயம் வைரலானது.

ஹேண்ட் சானிடைசரை காரில் வைத்திருந்தால் தீப்பிடிக்குமா? – உண்மை என்ன?

ஆனால் ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் எரியக் கூடியதாக தன்மை கொண்டிருந்தாலும், அவை தன்னிச்சையாக எரியக் கூடிய திறன் கொண்டவை அல்ல என்பதே உண்மை. கதவுகள் சாத்தப்பட்ட சூடான காருக்குள் சானிடைசர் பாட்டிலை விட்டுச் சென்றால் அதிக வெப்பநிலை காரணமாக அவை தன்னிச்சையாக எரியும் என்ற கூற்றுக்கள் உண்மை இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். சானிடைசர் பாட்டிலை நன்கு மூடி, நிமிர்த்திய நிலையில் அதை காருக்குள் வைத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று டொரொன்டோ ஃபயர் சர்வீசஸ் கூறுகிறார்கள். சானிடைசர்கள் தீ பிடிக்க வேண்டுமானால் அதை யாராவது பற்ற வைத்தால் மட்டுமே எரியும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.