தோஷங்கள் நீங்கி சந்தோஷம் பெருக ஸ்ரீதுர்கை வழிபாடு!

 

தோஷங்கள் நீங்கி சந்தோஷம் பெருக ஸ்ரீதுர்கை வழிபாடு!

எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் அதனை அகற்றி, வெற்றிகளை அருள்பவள் துர்காதேவி. துர்கம் என்றால் குகை. அடியார்தம் மனக்குகையில் வசிப்பவள் ஆதலால், அவள் துர்கா எனப் போற்றப்படுகிறாள். துர்காதேவி முழுமுதற் கடவுளான விநாயகருக்கு தாயாகவும், சித்தர்களின் தலைவியாகவும் தோன்றி பசி, தாகம், சோம்பல், பிரமை நீக்கி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி, வீரம் ஆகியவற்றைத் தருகிறாள். துர்காதேவியை இஷ்டதெய்வமாக ஏற்று வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள், தீவினைகள் நீங்கும். சந்தோஷம் பெருகும். துர்க்காதேவிக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும்.

தோஷங்கள் நீங்கி சந்தோஷம் பெருக ஸ்ரீதுர்கை வழிபாடு!

அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும். துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும். நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம் பழங்களை வாங்கி இரண்டாக அறுத்துச்சாறு பிழிந்துவிட்டு நெய் ஊற்றி திரிபோட்டு, கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும். ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும். திருமணம் ஆகாத பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும். எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள். தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள்.

தோஷங்கள் நீங்கி சந்தோஷம் பெருக ஸ்ரீதுர்கை வழிபாடு!

அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள். அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.
தூர்கா தேவியை குங்குமம், செந்நிறப் பூக்களால் பூஜித்து, சர்க்கரைப் பொங்கல், கனி வகைகள் படைத்து வழிபடுங்கள்.

தூர்காதேவி விரதம் இருக்கும் நாட்களில் ஸ்ரீதேவி பாகவதத்தை பாராயணம் செய்வது சிறப்பனாதகும்.

கீழ்க்காணும் துதிப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். இதனால், மங்கல வாழ்வும் மாங்கல்ய பலமும் பெருகும்.

வழிபாட்டு மந்திரங்கள்

தேவி ஸ்தோத்திரம்

‘சர்வ மங்கள மாங்கல்யே சதா புருஷார்த்த சாதகே
சரண்யே பஞ்சசக்தி ரூபே தேவி மகாபூரணி
நமோஸ்துதே

மங்களேஸ்வரியம் பாடல்களில் ஒன்று…

பார்வதியே கெளமாரி பங்கயத்தி சிற்பரையே
சீர்மிகுந்த வாடைபுனை தேவியே வார்சடையான்
வாமமதில் வாழுகின்ற மங்களத்தே மாங்கனியே
நாமமதில் தேன்சுவைக்கும் நா!

தோஷங்கள் நீங்கி சந்தோஷம் பெருக ஸ்ரீதுர்கை வழிபாடு!

கயற்கண்ணியான அம்பாளை பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரக் காரர்கள் பூஜித்து வந்தால், அவர்களது வாழ்வில் என்றென்றும் வெற்றியே!

  • வித்யா ராஜா