வறுமை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ ஶ்ரீமகாலட்சுமி வழிபாடு!

 

வறுமை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ ஶ்ரீமகாலட்சுமி வழிபாடு!

வறுமை நீக்கி செல்வ செழிப்புடன் சகல சௌபாக்கியங்களுடன் நம்மை வாழவைக்கும் ஶ்ரீமகாலட்சுமி தேவியை வணங்கி இந்த நாளை இனிதாக்குவோம். உலக வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது செல்வம். அதன் அதிபதியாகவும், அதை அள்ளி வழங்குபவளாகவும் திகழ்பவள் மகாலட்சுமி. அவளே வீரர்களிடம் வீரலட்சுமியாகவும், தேசத்தைச் செழிக்கச் செய்யும் ராஜ்ஜிய லட்சுமியாகவும், உணவுப் பொருட் களில் தான்ய லட்சுமியாகவும், யோகிகளிடம் யோக லட்சுமியாகவும், மனச் சலனங்களை நீக்கும் தைரிய லட்சுமியாகவும், பிள்ளைச் செல்வம் அருள்வதில் சந்தான லட்சுமியாகவும், வீடுகளில் கிரக லட்சுமியாகவும், விளக்குகளில் தீபலட்சுமியாகவும் திகழ்கிறாள்.

வறுமை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ ஶ்ரீமகாலட்சுமி வழிபாடு!

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுதல், தலைவாயிலைக் கழுவி கோலமிட்டு பூக்களால் அலங்கரித்தல், வெள்ளிக்கிழமைகளில் வில்வத்தால் அர்ச்சித்து ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்குதல், இனிப்பு தானம், குலதெய்வ வழிபாடு ஆகியவற்றால், லட்சுமி கடாட்சத்தை பரிபூரணமாகப் பெறலாம்.

செல்வத்தை அள்ளித் தருபவளான ஸ்ரீமகாலட்சுமி தாயாரை அனுதினமும் வழிபடுவது அவசியம். வெள்ளிக் கிழமைகள், ஏகாதசி, கார்த்திகை மாத ஸ்ரீபஞ்சமி திதிகளில் வழிபடுவது சிறப்பாகும்.

வறுமை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ ஶ்ரீமகாலட்சுமி வழிபாடு!

துளசி, வில்வம், வாசனை மலர்களால் பூஜித்து, சர்க்கரை பொங்கல் அல்லது ஏதாவது இனிப்பு பலகாரங்கள் படைத்து வழிபடலாம். ஸ்ரீசூக்தம், ஸ்ரீலட்சுமி தந்திரம், ஸ்ரீஸ்துதி பாராயணம் செய்வது சிறப்பாகும்.

வெள்ளிக் கிழமை மாலையில் தாமரை வடிவிலான கோலம் போட்டு, அதன் மீது ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றிவைத்து, அதையே ஸ்ரீ மகாலட்சுமி தாயாராக பாவித்து தாமரைப் பூக்களால் திருமகளின் 12 திருப் பெயர்களைக் கூறி அர்ச்சித்து வழிபடுவதால், வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

வழிபாட்டு மந்திரங்கள்

ஸ்ரீமகாலட்சுமி ஸ்தோத்திரம்

பத்மபத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோநம:
பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச
நமோநம:

லட்சுமி ஸ்தோத்திரம்

மானே மடமயி லேயிசை பாடிடு மாங்குயிலே
தேனே நவமணி யேமிடி நோய்தவிர் தெள்ளமுதே
வானே முதலெங்கு மாயவளேயிவ் வறுமையினி
நானே பொறுக்கிலன் வந்தாள் செந்தாமரை நாயகியே

வறுமை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ ஶ்ரீமகாலட்சுமி வழிபாடு!

ஸ்ரீ மகாலட்சுமி தாயாரிப் வழிபாட்டின்போது இந்த துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவதால், எண்ணிய காரியங்கள் விரைவில் ஈடேறும் என்பது ஐதீகம்.