வேலையில் நிலைத்திருக்க மஹாளய பட்ச திரியோதசி திதி வழிபாடு!

 

வேலையில் நிலைத்திருக்க மஹாளய பட்ச திரியோதசி திதி வழிபாடு!

மஹாளய பட்சத்தின் பதின்மூன்றாம் நாளான திரியோதசி திதியில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால், வேலையில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் இருக்கவும், பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவைக்கு சிறப்பானது திரியோதசி திதி.
நமது முன்னோர்கள் பூத உடலை உதிர்த்து விட்டாலும் ஆன்மா சூட்சும வடிவத்தில் இருக்கும். அந்த சூட்சும வடிவில் இருக்கும் ஆன்மாக்களை திருப்திப்படுத்தாவிடில் அந்தப் பாவத்தின் காரணமாக சங்கடங்கள் வரலாம். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் திருமணத்தடை, எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேராமல் போதல், பணியிடத்தில் கெட்ட பெயர், கணவன் மனைவிக்குள் பிரிவுகள், குடும்பத்தில் சச்சரவுகள், தீராத கடன் தொல்லை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று சிலருக்கு இருக்கலாம். இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏதாவது வரலாம். அதற்குக் காரணம் அவர்கள் பித்ருக்களுக்கு முறையாக எள்ளும் நீரும் கொடுக்காததாலேயே ஆகும்.

வேலையில் நிலைத்திருக்க மஹாளய பட்ச திரியோதசி திதி வழிபாடு!


முன்பே சொன்னபடி மஹாளய பட்சத்தின் போது முன்னோர்கள் ஆன்ம வடிவில் பசியோடும், தாகத்தோடும் பூவுலகுக்கு இறங்கி வருவார்கள். அவர்கள் பூவுலகு வரும் நாட்கள் மிகவும் குறைவு. மாத அமாவாசை, அவர்களது திதி நாள், இவை தவிர மஹாளய பட்சம் ஆகியவைதான். அப்போது நாம் அவர்களின் பசியையும் தாகத்தையும் போக்காவிட்டால் அவர்கள் மனம் வேதனை அடையும். அந்த ஆன்மாக்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையை நினைவுபடுத்தவே தடைகள் பல ஏற்படும். எனவே மற்ற அமாவாசை நாட்களில் செய்ய முடியாமல் போனாலும் மஹாளய பட்ச காலங்களிலும் மஹாளய அமாவாசை அன்று பித்ருகடன் செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசிர்வாதம் செய்வார்கள். காரணம் இந்த நாட்களில்தான் அவர்கள் அதிக நேரம் பூமியில் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

வேலையில் நிலைத்திருக்க மஹாளய பட்ச திரியோதசி திதி வழிபாடு!

புராணங்களில் கடவுளின் அவதாரமான ஸ்ரீராமரும் தனது முன்னோருக்கு மஹாளய அமாவாசையின் போது தர்ப்பணம் செய்தார். அதன் பலனாலேயே தான் யாராலும் வெல்ல முடியாத இராவணனை வென்றாராம். தசரதன், நளன், அரிச்சந்திரன், கார்த்த வீரியார்ஜூனன், யயாதி, துஷ்யந்தன் ஆகியோரும் மஹாளய அமாவாசை அன்று முன்னோருக்கு வழிபாடுகள் செய்து பல சிறப்புகளைப் பெற்றுள்ளனர்.

வேலையில் நிலைத்திருக்க மஹாளய பட்ச திரியோதசி திதி வழிபாடு!


இன்று திரியோதசி திதியில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுங்கள். அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விடுங்கள். முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு வணங்குங்கள். அவர்களை முழு மனதோடு நினைத்து நம்மால் முடிந்த தான தர்மங்களை முடியாதவர்களுக்கு செய்யுங்கள். முன்னோர்களின் ஆசியை பெறுங்கள்.

_வித்யா ராஜா