வில்லங்கம் தீர்க்கும் விபூதி விநாயகர்!

 

வில்லங்கம் தீர்க்கும் விபூதி விநாயகர்!

உலகிற்குத் தேவையான அனைத்துச் செல்வங்களுடன், அதற்கும் மேலாக சிவபெருமானின் அருட்செல்வத்தையும் வழங்குவது விபூதி.
திருநீருதான் மலையானதோ பழனியிலே என்று ஒரு பாட்டும் உண்டு. அத்தகையை பெருமைக்குரிய விபூதியே விநாயகராக மாறி நின்றால் கேட்கவா வேண்டும்!

விபூதி என்ற பெயர்‘விபூ’என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு ஆத்மார்த்தமான,சக்தி வாய்ந்த, நித்தியமான இறைவன் என்று பொருளாகும். இது கடவுளின் மிக உயர்ந்த சக்தியின் வெளிப்பாடு ஆகும்.

வில்லங்கம் தீர்க்கும் விபூதி விநாயகர்!

சிவபெருமானும் விபூதியும் ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய ஆரம்பத்தை பறைசாற்றுகின்றன. அது போன்று தான் நமது பிறப்பும் இறப்பும். நம் வாழ்க்கை எல்லாம் ஒரு நாளைக்கு முடிவுக்கு வரும். மிஞ்சுவது நம் சாம்பல் மட்டுமே. மும்மூர்த்திகளான சிவன்,பிரம்மா, விஷ்ணுவால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் கடைசியில் சாம்பாலாக்கப்படுவதுதான் என பிரபஞ்சம் சொல்லுகிறது.
உயிர்களிடத்து உள்ள தீங்குகளை பாவங்களை போக்கி சாம்பலாக்கி புத்துயிர் மறுபிறவி கொடுக்கிறார் என்பது பொருள்.
அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த விபூதியால் விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள் பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.

விநாயகப் பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு கரையில் முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமான் தம் திருமேனி முழுவதும் எப்போதும் விபூதி அபிஷேகம் காணும் ‘விபூதி விநாயகராக’ தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். விபூதி விநாயகரின் மேற்புறம் காசி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் அருள்புரிகிறார்.

வில்லங்கம் தீர்க்கும் விபூதி விநாயகர்!

விபூதி விநாயகருக்கு பக்தர்களே தனது கைகளாலேயே விபூதி அபிஷேகம் செய்து வழிபடலாம். தொடர்ந்து 11 நாட்கள் அல்லது தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகளில் விபூதி அபிஷேகம் செய்து 11 முறை விபூதி விநாயகர் சன்னிதியை வலம் வந்து வழிபட்டால்,பித்ரு தோஷங்கள்,முன்ஜென்ம வினைகள், வறுமை, சுபகாரியத் தடைகள் முதலியன அகலும் என்கிறார்கள்.

பூசம்,மகம், உத்திரம்,விசாகம்,கேட்டை,பூராடம் நட்சத்திர நாட்களிலும் பிரதமை,சதுர்த்தி, திரயோதசி, அமாவாசை, முழுமதி நாட்களிலும் விபூதி விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடுதல் சிறப்பாகும். விபூதி என்றால் ‘மேலான செல்வம்’ எனப் பொருள். எனவே, இந்த விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் பெருஞ்செல்வம் வந்து சேரும்.
விநாயக பெருமானை வணங்கும்போது எல்லா நாளும் சொல்லவேண்டிய மந்திரம்: “நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ ஸ்வரூபகம் கணபதயே நம.”

வில்லங்கம் தீர்க்கும் விபூதி விநாயகர்!

கணபதியே நவகிரக வடிவில் உள்ளார் என்றெண்ணி, அதற்குரிய துதிகளைச்சொல்லி வணங்கினால் இடையூறுகள் விலகுவது நிச்சயம். காரிய வெற்றியும் கைமேல் கிட்டும்.
ஓம் விநாயகனே போற்றி!

-வித்யா ராஜா