சகல செல்வங்களும் கிட்ட தட்சிணாமூர்த்தி வழிபாடு !

 

சகல செல்வங்களும் கிட்ட தட்சிணாமூர்த்தி வழிபாடு !

இறைவனே ஞானத்தின் திருவுருவமாகவும், அதைப் போதிக்கும் ஆசானாகவும் திருக்கோலம் தாங்கிய நிலையில் தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார் என்கின்றன ஞானநூல்கள்.
சிவபெருமானின் யோக, போக, வேதத் திருவடிவங்களில் தென்முகக் கடவுள் யோக வடிவம். ‘தட்சிணா’ என்றால் ‘தென்னன்’ என்று பொருள் கூறுவர். ஆற்றல், ஆளுமை, யோகம், வீரம் ஆகிய பொருள்களையும் அந்தச் சொல் குறிக்கும். தெற்கு அழிவைக் குறிப்பதும், வடக்கு அழியாத அமுத வாழ்வைக் குறிப்பதுமாகும். ஆன்மா வடக்கு நோக்கி வழிபட ஏதுவாக இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து அருள் புரிகின்றார். ஆனந்த வடிவமான ஆடல் வல்லானும் அமைதி வடிவான தென்முகக் கடவுளும் தெற்கு நோக்கியே அருள் புரிகின்றனர்.

சகல செல்வங்களும் கிட்ட தட்சிணாமூர்த்தி வழிபாடு !

தென்முகக் கடவுள் தர்மத்தின் வடிவம். இவரை ‘அறம் பயந்த செல்வர்’ என்றும் சொல்வார்கள்.

தன்பால் அன்பும் உலகத்தின்பால் உவப்பும் உண்டாக்குவார். ஞான யோக நெறியை சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்களுக்கு கற்பிக்கும் பாங்குடன் உலக மக்களுக்கு கற்பித்தருளும் ஞானவடிவமாக திகழ்பவர். ஞானச் செல்வம் மட்டுமல்ல, உலக குருமார்களுக்கு எல்லாம் குருவான தட்சிணாமூர்த்தியை வழிபட, சகல செல்வங்களும் ஸித்திக்கும். தட்சிணாமூர்த்தியை அனுதினமும் வழிபட உகந்த நாட்கள்களாகும். குறிப்பாக குரு வாரமாகிய வியாழக்கிழமை வழிபடுவது விசேஷமாகும்.
ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்கள், நல்ல உத்தியோகத்துக்காக காத்திருப்பவர்கள், உத்தியோகத்தில் சிக்கல்கள் நீங்கவும், கல்வியில் மந்த நிலை மாறவும் விரும்புபவர்கள் சிவப்பெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்தியை வில்வம் இலைகளால் பூஜித்து,
கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வியாழன் தோறும் வழிபட்டு பலன் பெறலாம் என்பது ஐதீகம்.

சகல செல்வங்களும் கிட்ட தட்சிணாமூர்த்தி வழிபாடு !

வழிபாட்டு மந்திரங்கள்

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
உபாஸகானாம் யதுபாஸனீய
முபாத்தவாஸம் வடசாகமூலே
தத்தாம தாக்ஷிண்யஜுஷா ஸ்வமூர்த்யா
ஜாகர்த்து சித்தே மம போதரூபம்

ஸ்ரீதட்சிணாமூர்த்தி துதிப்பாடல்..

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறு அங்கம் முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லவுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவர் அருளிய பாடல் இது.

சகல செல்வங்களும் கிட்ட தட்சிணாமூர்த்தி வழிபாடு !

தென்முகக் கடவுளை வழிபட்டால், இழந்த பதவி மற்றும் செல்வங்களைப் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.
-வித்யா ராஜா