Home ஆன்மிகம் தீவினைகள் விலகி அமைதி நிலவ பிரதோஷ நாளில் நரசிம்மர் வழிபாடு!

தீவினைகள் விலகி அமைதி நிலவ பிரதோஷ நாளில் நரசிம்மர் வழிபாடு!

பிரதோஷம் காலம் எனது சிவபெருமானுக்கு மட்டுமல்ல. ஸ்ரீ மஹா விஷ்னுவிற்கும் உகந்த காலம்தான்.
பிரஹலாதனின் பக்தியை மெய்பிக்கவும் ஹிரன்ய கசிபுவை வதம் செய்து உலகை காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம்தான் இந்த பிரதோஷ காலம்.


எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.


இந்த நேரத்தில் நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும், கடன்கள் தீரும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதீகம்.
எனவே, துயரத்தின் பிடியிலிருந்து விடுபட சிவபெருமானையும் ஸ்ரீ நரசிம்மரையும் வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம் காலம். மேலும் துயரத்தின் பிடியில் இருப்பவர்க்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால்தான் துயரத்தின் தன்மை குறையும். பிரதோஷ காலம் என்பது கோதூளி லக்ன காலம் என்பதால் சிவபெருமானையும் மஹா விஷ்ணுவையும் வணங்குபவர்களுக்கு ஸ்ரீ மகாலட்சுமி அருளும் இணைந்தே கிடைக்கும் நன்நாள்.


ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பிரதோஷ வேளையில் பாராயணம் செய்து, பாணக நிவேதனம் சமர்பித்து வழிபட்டு வந்தால் எல்லாவித கடன்களும், துன்பங்களும் அகலும். ஆயுள் பெருகும். வேண்டிய பலன்கள் யாவும் கிடைக்கும். லட்சுமி நரசிம்மரின் திருவருள் கிட்டும்.


சென்னை வேளச்சேரி, திருவல்லிக்கேணி, அரக்கோணம் அருகில் உள்ள சோளிங்கர், சிங்ககிரி, செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீ ரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும்.

-வித்யா ராஜா

மாவட்ட செய்திகள்

Most Popular

“இனி வெங்காயத்தை வங்கி லாக்கர்லதான் வைக்கணும்” -வீட்டிற்குள் புகுந்து வெங்காயத்தை திருடிய கூட்டம்

நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து வருவதால் அதை பதுக்கும் வியாபாரிகளுக்கு மத்தியில் அதை திருடும் கூட்டமும் பெருகியுள்ளது .

“ஸ்டாலின் ராசி இல்லாதவர் ; அவரால் முதல்வர் ஆக முடியாது” : அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சனம்!

ஸ்டாலின் ராசி இல்லாதவர் அவரால் முதல்வராக முடியாது என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார். மதுரை கள்ளந்திரியில் அ.தி.மு.க.தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை...

‘நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்’ : நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!

சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மாணவரணி, இளைஞரணி,...

‘மாலத்தீவில் கட்டுமான பணி’ : ரூ.40 லட்சம் மோசடி செய்த தந்தை – மகன் கைது!

மாலத்தீவில் கட்டுமானப்பணி என்று கூறி தந்தை -மகன் இருவரும் ரூ.40 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஜீவா...
Do NOT follow this link or you will be banned from the site!