கார்த்திகை தீபம்- ஶ்ரீரங்கத்தில் 20 அடி உயர சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

கார்த்திகை தீபம்- ஶ்ரீரங்கத்தில் 20 அடி உயர சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

திருச்சி

திருச்சி ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, நம்பெருமாள் காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்தன மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

கார்த்திகை தீபம்- ஶ்ரீரங்கத்தில் 20 அடி உயர சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

பின்னர் 2 முறை புறப்பாடாக கதிர் அலங்காரம் எனப்படும் மூலிகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, கருடாழ்வார் மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து தீபமானது கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் 20 அடி உயரத்தில் பனை ஒலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையை வலம் வந்து, கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

கார்த்திகை தீபம்- ஶ்ரீரங்கத்தில் 20 அடி உயர சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் நம்பெருமாள் திருவந்திகாப்பு செய்யப்பட்டு இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.